தலைமையாசிரியரின் இரங்கல் உரை


வைத்தியலிங்கம் மிகவும் நல்லவர்
வைத்தியலிங்கம் என் உயிர்த்தோழர்
வைத்தியலிங்கம் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்
இந்த மூக்குக்கண்ணாடியை கூட அவர் தான் மூர்மார்க்கெட்டில் 

வாங்கிக்கொடுத்தார்
நான் செய்நன்றி மறவாதவன்
செய்நன்றிக்கு ஆங்கிலத்தில் Gratitude என்று பொருள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவன் வாக்கு
நான் உண்டு வீசிய வாழைப்பழத் தோல் வழுக்கி வைத்தியலிங்கம் 

மரணமடைந்தார் என்பது துரதிர்ஷ்டவசமானது
வைத்தியலிங்கத்தை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடாக

நூற்றியொரு வாழைப்பழங்களை
கொடுக்க ஆணையிடுகிறேன்
என்று தொண்டை கமறிய தலைமையாசிரியர்
அதற்கு மேல் பேச முடியாமல் தலைப்பாகையை சரிசெய்துக்கொண்டு 

நாற்காலியில்
அமர்ந்து துக்கம் தாளாமல் வாழைப்பழம் சாப்பிட்டார்.


No comments: