இன்மையின் பாடல்
சென்ற வருடத்தின் இறுதியில் இன்மையின் பாடல் குறும்படத்திற்கான படப்படிப்பை நிகழ்த்தினேன்.அதன்பிறகு இத்தனை மாதங்கள் கழித்து இப்போதுதான் Post Production வேலைகளை முடித்தேன்.பெங்களூரில் வேலையில் இருப்பதால் Post Production வேலைகளை அவ்வளவு வேகமாக செய்ய இயலவில்லை.இந்த குறும்படம் எனக்கு மிகுந்த அக மகிழ்வை அளித்திருக்கிறது.நான் மிக தீவிரமாக நம்பும் கருத்தை குறும்படமாக மாற்ற முயன்றதில் ஒரளவு வெற்றி பெற்றிருக்கிறேன்.இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.எஸ்.ராமன் இந்த கதாபாத்திரத்திற்கு மிக நன்றாக பொருந்தினார்.எழுத்தாளர் பாரவி, மதுரை ராஜாமணி, கூத்துப்பட்டறை தம்பிச்சோழன்,ஈஸ்வர் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.தம்பிச்சோழன் இந்த குறும்படத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்.அவருக்கு என் நன்றி.சென்னை திரைப்பட கல்லூரியின்  ஒளிப்பதிவு மாணவரும் , திரைத்துறையில் துணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துவரும் ஆர்.ராஜ்குமார் ஓளிப்பதிவு செய்தார்.பண்டிட் பாலேஷ் இசை அமைத்தார்.ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பு செய்தார்.இந்த படத்தின் Post Production வேலைகளில் மிகவும் மகிழ்ச்சி அளித்தது Sound Mixing செய்த பாலமுருகனின் அர்ப்பணிப்பு.அவருக்கு திரைத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.கதை எழுத துவங்கியதிலிருந்து தொடர்ச்சியாக இந்த குறும்படத்திற்காக பல்வேறு உதவிகளை எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் செய்திருக்கிறார்.அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தீவிரமான மன அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த குறம்படத்திற்கான கதையை உருவாக்கினேன்.இன்று இந்த குறும்படத்தை முடிந்திருக்கும் இந்த தருணத்தில் நான் எனது மன அழுத்தங்களிலிருந்து வெகுவாக விலகிவந்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.குறம்படத்தை எழுத்தாளர் நகுலனுக்கு சம்ர்ப்பணம் செய்திருக்கிறேன்.இந்த குறும்படத்தை இணையத்தில் எல்லோரும் பார்க்கும் விதத்தில் இப்போதைக்கு பதிவேற்றம் செய்யவில்லை.பார்க்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.குறும்படம் பார்பதற்கான இணைப்பை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.