சாதாரண வாழ்க்கை


கலைஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் , இன்னும் பலவாகவும் ஆக ஆசைப்படும் இளைஞர்களை பார்க்க முடிகிறது. உண்மையில் எதற்காக இவையெல்லாம்.அங்கீகாரத்திற்காகவா. எதன் பொருட்டோ. சாதாரணமானவர்களாக வாழ்வது எத்தனை கடினமானது.இன்றும் நம் நாட்டின் பல கோடி மக்கள் விவசாயிகளே.அடையாளமற்று கரைந்து போகிறவர்களே.பல வேடிக்கை மனிதரை போல வீழ்வதில் ஒன்றும் குறைந்துபோய் விடபோவதில்லை. பாதசாரியின் காசி சிறுகதையில் 'காரியங்களை காரியங்களுக்காகவே மட்டுமே செய்வதில் ஒரு விடுதலை உணர்வும் , பரபரப்பற்ற பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டுவிட்டதால் , எந்தக் காரியுமுமே தனக்குப் பேரானந்தமாக இருக்கிறது' என்ற வரி என்னை மீட்டது. உண்மையில் இது பெரிய விஷயம் இல்லை.நம் மரபு இதை கூறுகிறது.நம் தினசரி வாழ்க்கையில் நம் அண்னையர் , பல தொழிலாளிகள், என பலரும் இப்படி வாழ்வதை பார்க்கிறோம்.ஆனால் இதை கூர்ந்து கவனிக்க வாழ்வின் மற்றொரு பக்கத்தை எனக்குக் காட்ட இந்த சிறுகதை பெரிதும் உதவியது.தற்கொலை பற்றி தீவிரமாக சிந்தித்த நாட்கள் அவை.தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை போன்ற மனிதர்களே பிற எந்த மனிதரும் என்ற எண்ணத்தை மிக தீவரமாக உண்டாக்கியது.தாழ்வு மனப்பான்மை எண்ணிலிருந்து நீங்கியது.அந்நியன் நாவலும் , மாசனோபுவின் ஒற்றை வைக்கோல் புரட்சியும் இரு வேறு உலகங்களை எனக்கு காட்டின.பல்வேறு மனித நிலைகள் உண்டு என்ற புரிதல் ஏற்பட்டது.அந்நியன் நாவலில் 'எல்லா வாழ்கையும் மதிக்கதக்கதே' என்ற வரி நான் என் வாழ் நாளில் என்றும் மறக்க மாட்டேன்.வாழ்கை சார்ந்தே என் வாசிப்பு.நான் பெரிய வாசகனும் அல்ல.


ஜெயகாந்தனின் 'ஒரு இலக்கியவாதியின் அரசியல் கட்டுரைகள்' எனக்குள் பெரிய மன எழுச்சியை ஏற்படுத்தியது. தன் மக்கள் மக்களோடு மக்களாக கரைந்து போய் தொழிலாளிகளாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதாக எழுதியிருப்பார்.மிக முக்கியமான வரிகள்.பாரீஸின் குடோன் தெருவில் முட்டை தூக்கி வாழவேண்டும் என்று ஆசைப்படவது இல்லை யாரும்.அதுவம் ஒரு வாழ்க்கை முறைதான்.அவர்களும் மனிதர்கள்தான்.நானும் மனிதன்தான்.வேறுபாடு இல்லை எவ்வகையிலும். வாழ்க்கை சுவாரசியமாக மாற ஆரம்பித்திருக்கிறது. மனிதர்கள் மீதும் , என் மீதும் , காதல் கொள்கிறேன். மனதிர்களோடு வாழ ஆசைப்படுகிறேன்.என் நுண்ணுர்வை எரிச்சல் அடைய செய்யாத எதையும் செய்யலாம் என்று புரிதல் கொள்கிறேன்.சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். அவற்றில் நம்மை கரைத்து கொள்வதே சரி.அதுவே யோகம்.அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். அதுவே நமக்கான மகிழ்ச்சி.ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள நாம் செய்ய வேண்டியது நம்மை நம் செயலில் கரைத்து கொள்வது.நம் அண்ணையர்களை பார்ப்போம், நம்மை சுற்றி இருக்கும் பெரும்பாலான மனிதர்களை பார்ப்போம்.அங்கீகரிக்க படுவதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதை அறிவோம்.

எந்தக் கலையும் ஒருவனிலிருந்து பீறிட்டு எழுவதே சரி.அப்போது மட்டேம அது பதிவு செய்ய பட வேண்டும்.மற்றபடி தொழிலாளிகளாக இருப்பதே , மக்களில் ஒருவனாக இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை.


வாழ்வோம் நமக்கான வாழ்க்கையை.