Showing posts with label கோசாம்பி. Show all posts
Showing posts with label கோசாம்பி. Show all posts
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 5
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4
இந்தக்குழுவை சேர்ந்த பெண்கள் சாலையில் ஒரு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாமிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதும் உணவு தயாரிப்பிலும் ஈடுபடுவர். ஆண்கள் மந்தை ஆடுகளை ஊர்புறமாக மேய்த்து ஏதேனும் விவசாயியின் நிலத்தில் இரவு விட்டுவிடுவர்.ஆடுகளின் இரவு கழிவு மதிப்புள்ள உரம் என்பதால் விவசாயி அதற்கு பணமாகவோ வேளான் விளைபொருளாகவோ தருவர்.இந்த கட்டணங்களும் இதனுடன் கம்பளி போன்றவற்றை விற்பதில் கிடைக்கும் சிறுதொகை எப்போதாவது விலங்கு இவையே ஆயர்நாடோடிகளின் வாழ்வாதாரம்.
மழைக்காலத்திய நான்கு மாதங்களில் தாங்கர் மேய்ச்சல்காரர்கள் மேய்ச்சல் புல்வெளி நிலங்களிலிருந்து காய்ந்த சமவெளிகளில் உள்ள பாரம்பரிய முகாம்களுக்கு , ஆடுகளுக்கு சேற்றுநிலத்தில் தொற்றிக்கொள்ளக்கூடிய குளம்பு அழிவியிலிருந்து பாதுகாக்க இடம் பெயர்வர்.மழைக்காலங்கள் முகாம்கள் எல்லாமே உலர்கல் கட்டுமானத்தாலான ஆட்டுக்கிடைகள்.இவை முன்வரலாற்று காலத்தில் கட்டப்பட்டவை.நான் இந்தியாவில் கண்டுபிடித்த முன்வரலாற்று கல் கருவிகளின் வளமான படுவுகள் பலவும் தாங்கர்களின் மழைக்கால முகாம்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.முன்வரலாற்று காலத்தை சேர்ந்த செதுக்கப்பட்ட கல் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது.
இந்த கல் கருவிகள் நுண்கற்கள் என்ற மெல்லிய தகடுகள்.இதிலுள்ள ஆர்வமூட்டும் விஷயம் தாங்கர்கள் நுண்கற்களை பார்க்கும் போது அவற்றை அடையாளம் கண்டுகொள்வதில்லை, ஆனால் அதே போன்ற கருவிகளை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.ஒரு ஆட்டுக்குட்டி நலந்தட்டல் செய்யப்படவேண்டும் என்கிற போது , தாங்கர் மேய்ப்பர் இருகற்களில் ஒன்றை சுத்தியலாகவும் மற்றதை அடைகல்லாகவும் வைத்து சற்கடோனியை உடைப்பர்.பின்னர் சற்கடோனியின் நுண் தகடை நலந்தட்டலுக்கான கத்தியாக பயன்படுத்துவர்.அந்த நுண்தகடு கல் பயண்படுத்தப்பட்ட பின் ஆட்டுக்குட்டியின் விரைகளோடு சேர்ந்து சடங்குப்படி கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் வீசப்பட்டுவிடும்.
மகாராஷ்டிராவில் தக்காணத்து பகுதியிலுள்ள ஒரு பாரம்பரிய சடங்கான பந்தர்பூர்க்கான புனித யாத்திரை — இன்றும் தாங்கர் மேய்ப்பர்களின் முறையாக இருக்கும் பருவகாலப் அலைதல்கள் போன்று எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு வகையில் உள்ளாகியிருந்த காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும் . ஒரே பகுதியில் நிலைத்த விவசாய முறையிலான வாழ்க்கையோடு இந்த புனித யாத்திரை பொருத்தமற்றதாக இருக்கிறது.பந்தர்பூருக்கான பயணம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுப்பதோடு பாரம்பரியமாக மழைக்காலத்தில் தொடங்கும் சடங்காகும். அத்தகைய ஒரு பழக்கம் விவசாய சமூகத்தில் தோன்றியிருக்க முடியும் என்பது நம்புவதற்கு கடினம் ஏனேனில் மழைக்காலங்களிலேயே அவர்கள் பெரும்பாலான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3
பார்தி சமய வழக்கங்கள் பெற்றுக்கொண்டதுவும் தொன்மை கூறுகளினதுவுமான கலவை.வழிபாட்டின் பிரதான பொருள் நவீன உற்பத்தியிலான வெள்ளியில் செய்த தட்டையான அலங்காரமான பொருள். அதில் ஒரு இந்து தாய்தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.இருந்தும் மிக முக்கிய சடங்கு - வளம் ஆடல் - அதன் ஒவ்வொரு குறிகளுமே அது உண்மையில் தொன்மையானது என்பதை குறிக்கிறது.இதில் ஆடுபவர் ஒரு ஆண் - சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பழங்குடிகளில் ஒரு குழுவின் தலைமையில் இருப்பவர் .அவர் தன்னை ஒரு பெண்ணாக ஆடைஅமைத்து கொள்கிறார்.அவர் சடங்கில் ஒரு பூசாரி மாத்திரம் அல்ல.அவர் தன்னை ' நான் தான் அம்மன்' என்று சொல்லிக் கொள்கிறார்.
இந்த வளமை சடங்கின் ஒரு பகுதி இந்துகளுக்கும் தொன்மரபினருக்குமான தலைகீழ் புதுபண்பாட்டை ஏற்றுக்கொண்டதற்கான சுவாரசியமான சான்றுகளை வழங்குகிறது. ஆடுபவர் ஒரு கட்டத்தில் தன் கையை எரியும் எண்ணை பாத்திரத்தில் மூழ்க்குகிறார் - ஆம் எந்த விதமான காயமும் இல்லாமல்.இது போன்ற கடுமையான சடங்கு பார்திகளின் பழைய வழக்கம். பார்திகளின் சோதனைகளில் தங்களின் அறியாமையை நிருபிப்பதற்காக ஒரு செந்நிற சூடான இரும்பை தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட அடிகள் நடக்க வேண்டும். இதற்கு இனையான இந்துக்களின் கடுமையான சடங்கு - சூடான நிலக்கரிமேல் நடப்பது - இதற்கு பிராமண வேத நூல்களில் எந்த வித ஒப்புதலும் இல்லை;சோதனைகள் குறித்து மிக முந்திய இந்து புனித புத்தகங்களில் எவ்வித குறிப்பும் இல்லை. சொல்லப்போனால் , நெருப்பில் நடக்கும் பழக்கம் கிறுஸ்துவ காலம் வரை இந்துக்களின் சடங்காக இல்லை.அதன் பின் இந்த சடங்கு தீவிர குற்றச் செயலுக்கான ஆதாரம் இருக்கும்போது பிரதானமாக அறியாமையை நிருப்பிப்தற்காக ஒரு வழிமுறையாக பெற்றுக்கொள்ளப்பட்டது.ஒருவர் இந்துக்களின் இந்த கடுமையான சடங்கு பார்திகளின் சோதனையின் போதான சடங்கை போல ஏதாவது ஒரு தொன்மையான இந்திய சடங்கிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.
மற்றொரு தொன்மையான குழுவான தெக்கானத்து பகுதிகளில் வாழும் தாங்கர்கள் - ஒரு பழங்குடியினர் அல்லாது ஒரு சாதியினர்.இதில் சிலர் விவசாயிகள் ; மற்றவர்கள் கம்பளி போர்வை செய்வதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.தாங்கர் குடும்பத்தில் - இருந்த ஹோல்கர்ஸ் - ராணுவ வாழ்வை பதினேட்டாம் நூற்றாண்டிலேயே மேற்கொண்டு இன்டோரின் மகாராஜாக்களாக உயர்ந்தார்கள்.தாங்கர் சாதியை சேர்ந்த ஒரு பிரிவினர் பழங்குடியின வாழ்வை மேற்கொண்டு நாடோடிகளாக மந்தை மேய்ப்பாளராக இருக்கிறார்கள்.ஒவ்வொரு தாங்கர் குழுவும் பண்ணிரெண்டு பேரை உள்ளடக்கியது. 300 செம்மறி ஆட்டு மந்தைகளை மேய்த்துகொண்டு, இந்த குழு வருடத்தின் எட்டு வரண்ட மாதங்களை பயணத்தில் செலவழிக்கிறது , இது மிகவும் ஆபுர்வமாக 200 மைல்களுக்குள்ளும் பெரும்பாலும் 400 மைல்கள் வரையும் வேறுபடலாம்.
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1
விஷயம் இப்படியிருந்திருக்கையில் விவசாயிகளின் ஜாதி இன்று பழங்குடியினரைவிட உயர்ந்ததாக இருக்கிறதே என்று ஒருவர் கேட்கலாம். பதிலை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.முதலாவது , ஆரம்பக்கட்ட தடுமாற்றங்கள் எதுவாக இருந்திருந்தாலும் விவசாயத்தை சாதாரணமாக பழகியதில் விவசாயிகளுக்கு பழங்குடியினரை விட பலமான பொருளாதார தளம் அமைந்தது. இந்தியாவில் வேறெங்கும் இருப்பது போல சமூக மதிப்புத்தரம் பொருளாதார அளவை பொருத்தே இருக்கிறது.இரண்டாவது இவர்களின் ஒரளவு சுமாரான உணவளிப்பால் பழங்குடியினரை விட வேகமாக பெருக்கமடைந்து எண்ணிக்கையில் கடந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தலாயினர்.
விவசாயிகளுக்கும் பழங்குடியினருக்கும் சாதி சமநிலையற்ற தன்மை இன்று நிலவினாலும் பரஸ்பர பண்பாட்டு பரிமாற்றத்திறகான சான்றுகள் நிறைய உள்ளன , குறிப்பாக சமயம் சார்ந்த துறையில். பெரும்பாலான இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுகிற பிராமண கோயில்களின் கடவுளின் தோற்றம் உண்மையில் பழங்குடி சடங்கு முறையிலிருந்து தோன்றியது. அதே சமயத்தில் பழங்குடி இன மக்கள் பழங்குடி வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை எடுக்கையில் தங்களின் தொன்மையான கடவுள்களை விட்டுவிட்டு இந்து சமய கடவுள்களின் பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து சமயத்தினதும் தொன்மரபுனதும் சடங்குகள் நாகரீக கண்களுக்கு விநோதமாக தெரிகிறது. சடங்குகளை வெறும் மூடநம்பிக்கை என்று நிராகரிப்பது ( அதை மனோதத்துவ முறையில் விளக்குவது மேலும் மோசமானது) என்பது இந்தியாவின் வரலாற்றையும் முன்வரலாற்றையும் ஒருங்கே படிப்பதற்கான உண்மையான வாய்ப்பை தூக்கியேறிவதாகும்.
என்னுடைய களப்பணி தக்காணத்து பகுதிகளையும் தீபகற்ப இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளையும் மட்டுமே உள்ளடக்கியது. இந்த பகுதியின் வட்டார வழக்கிலும் பழக்கவழக்கங்களிலும்
உள்ள பரிச்சயத்தால் தான் பழங்குடி மக்கள் மற்றும் கிராம வாழ்க்கையின் மீது விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.நான் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் பழங்குடியினர் ராஸ் பேஸ் பார்தி(Ras Phase Pardhi).மகாரஷ்டராவில் தற்சமயம் இருக்கும் இந்த மக்கள் உண்மையில் குஜராத்திலிருந்து வடக்கு நோக்கி வந்தவர்கள்.இவர்கள் குஜராத்தியின் வட்டார வழக்கு ஒன்றை பேசுகிறார்கள்.பார்திகள் நாடோடிகள்.இவர்களின் பயணங்களில் மெலிந்த கால்நடைகளை உடன் அழைத்து செல்வர். ஆண்கள் சில நாட்கூலி வேலைகளை செய்வதோடு பறவைகளை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடிப்பதில் தேர்ந்தவர்கள்.மேலும் சிறிய வேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர்.எனினும் இன்று பார்திகளின் முதன்மை பணி பிச்சை எடுப்பதும் திருடுவதும் தான்.இது ஆண்களாலும் பெண்களாலும் ஒருங்கே செய்யப்படுகிறது.பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதை பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான்.
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2
கால்நடைகள் செம்மறிஆடுகள் மற்றும் ஆடு மேய்ப்பர்களுக்கு மிகுதியான காய்கறி வளங்கள் , அவற்றுடன் சேர்ந்து பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கிறது என்பது வேட்டைக்கூட உயிர்வாழ்வதற்கு அத்தனை அவசியமானது இல்லை என்பதை தெளிவாக்குகிறது.இனிமையான இந்திய வானிலையில் ஒருவர் தன் ஜீவிதத்தை எதையும் கொல்லாமலே ஒப்புநோக்க சிறப்பாக காப்பாற்றிக் கொள்ள முடியும்.இந்த அடிப்படை யதார்த்தம் பழங்கால பழங்குடிகள் வாழ்வதற்கான காரணங்களை மட்டும் சொல்லவில்லை.இவை இந்திய சமூகவியல் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. குணாம்சியத்தில் இந்திய சமயங்களான புத்தமும் ஜெனமும் உயிர் வாழ்வதை பாவமாக கருதுகிறது. இத்தகைய ஒரு அறநெறி ரத்தமற்ற உணவு சேகரிப்பு முறையிலான பொருளாதாரம் முன்வரலாற்று இந்தியர்களுக்கு தேவையான வாழ்க்கை ஜீவிதத்தை தந்திருக்காவிட்டால் சாத்தியப்பட்டிருக்காது.இரும்பு காலத்தை சேர்ந்த ஏர் உழவு விவசாயத்தை பழகிய மக்கள் முதலில் கங்கையின் சமவெளி பகுதிகளின் எல்லைக்குட்பட்டு தான் வாழ்ந்தார்கள்.அத்தகைய செழிப்பான பகுதியிலிருந்து அவர்கள் தெற்கு பக்கம் அதிக சமவெளி காடுகள் நிரம்பிய தீபகற்ப இந்தியாவின் தக்காணத்து பகுதிகளுக்கு வந்தார்கள்.வன்முறையின் துனையோடு நடந்த ரோமின் இரும்பு காலத்திய கெளல் பழங்குடி ஆக்கிரமிப்பு மற்றும் ரெயின் பகுதிக்கு அப்பாலான காடுகளை கொணர்ந்ததுபோல இந்த நுழைதல் நடக்கவில்லை. வடக்கிலிருந்து வந்த உழவர்களை தெற்கிலிருந்த வன மேய்ப்பர்கள் மற்றும் உணவு சேகரிப்பாளர்களுக்குமான சந்திப்பு பரஸ்பரம் புதுப்பண்பாட்டை ஏற்கும் செயலை முடக்கிவிட்டிருக்கிறது.உணவு சேகரிப்பாளர்கள் விவசாயத்தை கற்றுக் கொண்டது போல விவசாயிகள் உணவு சேகரிப்பில் தங்களை ஈடுபடுத்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் காட்டு உணவு வகைகளை வேளாண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர். உற்பத்தியாளர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்குமான இந்த அனுசரித்து போகும் உறவு இந்தியாவின் கடந்தகால அமைப்பையும் மாதிரியையும் புரிந்து கொள்ள உதவுகிறது. இது இன்றைய சமூக ஏற்பாட்டில் பிரதிபலிப்பதோடு சாதியின் மூலங்கள் மற்றும் சாதி அமைப்பு பற்றியும் விளக்குகிறது.1
இந்தியாவின் பல பகுதிகளில் அப்பகுதியின் பழங்குடி மக்களுடைய பெயர்களும் அப்பகுதியின் விவசாய சாதியின் பெயர்களும் ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில் பழங்குடி மக்களுக்கும் விவசாயிகளுக்குமான சாதி வித்யாசம் அவர்களுக்கிடையே திருமணம் மற்றும் வேறு எந்தவித தொடர்புகளையும் தடுக்கிறது.புலம்பெயர்ந்த விவசாயிகளும் அதே இடத்தில் வசித்த உணவு சேகரிக்கும் பழங்குடியினரும் பொது காரணத்திற்காக வனப்பகுதிகளில் சந்தித்து கொண்டதால் இந்த பெயர்களின் ஒப்புமை ஒரே மூலத்திலிருந்து வந்ததாக இருக்கலாம்.சாதிய அமைப்பின் இரு முக்கிய குணாசியங்கள் - தங்கள் குழுவில் அல்லாதவரோடு திருமணம் செய்து கொள்ளவதற்கான தடை மற்றும் அந்நியரிடமிருந்து உணவு பெற்றுக்கொள்ளுதலுக்கு எதிரானது - இவை குறிப்படத்தக்க வகையில் பழங்குடி சமூகங்களுக்கும் விலக்கு. ஆக சாதிய அமைப்பு என்பது உணவு சேகரிப்பு செய்த அந்த மண்ணின் பழங்குடியினர் புலம்பெயர்ந்த ஏர்உழவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிறுவுவதற்கு பிற்பாடு உருவாக்கிய முயற்சியாக எண்ணிக் கொள்ளலாம்.
1 - '"The Untouchables" of India' , by M.N.Srinivas and Andre Betelle; Scientific American,December ,1965
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1
ஒரு முன்வரலாற்று ஆய்வாளருக்கு இருக்கக்கூடிய முதன்மையான பணி தான் ஆய்வு செய்ய விரும்பும் மறைந்துபோன மக்களின் வாழ்வை பற்றி எவ்வளவு இயலுமோ அவ்வளவு கற்றுக்கொள்வதுதான்.அவன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை விட சாட்சிகளோடே வேலை செய்ய விரும்புவதால் , சிலசமயம் தன்வரலாற்றையே எழுதாது வாழும் மக்களிடம் அத்தகைய ஒளியுட்டும் இணைக்கோடுகளை கண்டுகொள்கிறான்.கண்டிப்பாக இந்தியாவை தவிர வேறெங்கும் நாம் இத்தகைய இணைக்கோடுகளை இவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.ஒன்று மட்டும் உறுதி, பண்டைய காலத்தில் எழுதப்பட்ட எவற்றையுமே இந்தியாவின் வரலாறாக கொள்ள முடியாது.இஸ்லாமிய அரசர்களுக்கு முன்பு( பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகும்) வாழ்ந்த எந்த ஒரு வரலாற்று நாயகனின் ஆண்டையும் துல்லியமாக கூறுவது மிக அரிது .மேலும் பொதுவான கூறுகள் உண்மைகளுக்கோ பொது அறிவுக்கோ அக்கறை செலுத்துவதாக இல்லை.சுருங்கச் சொல்வதென்றால் , கண்டிப்பாக இன்று இந்தியாவில் இருக்கும் பல பழங்குடி இனமக்களின் பழக்கவழக்கங்கள் பண்படா காலத்தை ஒத்தது. இந்தியாவில் மொத்தம் உள்ள 440 மில்லியன் மக்களில் 30 மில்லியனை(சுமார் 6 சதவீகிதம்) பிரதிநித்துவப்படுத்தும் இந்த மக்கள் முன்வரலாற்றில் இருந்த இந்தியாவின் பல்வேறு அம்சங்களை தொல்படிமங்களாக பாதுகாக்கின்றனர்.
கி.மு. மூன்றாயிரத்திலிருந்தே மாநகரங்களும் நாகரிங்களும் இருந்திருக்கையில் எப்படி வரலாற்றுக்கு முன்பிலிருந்து பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாத இந்த மக்களின் வாழ்க்கை ஜீவிக்க முடிந்தது. இதற்கான விடை உணவு கிடைப்பதில் இருக்கிறது.இந்தியாவில் உணவு பற்றாக்குறை அனைவரும் அறிந்ததே.ஆனால் இது ஒப்பிடுகையில் தற்போதய உருவாக்கமே.இப்போது கூட பெரு விளைச்சல் கொடுக்காத நிலங்களில் வேலை செய்யும் கிராம விவசாயிகள் மற்றும் வறுமையில் வாழும் மாநகர்வாசிகளுக்கு மட்டுமே வரையறுக்கக்கூடியது இது.இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை மிகுந்த நேசக்கரம் கொண்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெறும் வேட்டை மற்றும் பண்டைய உணவு பாதுகாப்பு மூலமே மக்கள் எளிதாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.இப்போது கூட அதீத பயிரிடுதல் மற்றும் மிக அதிக அளவில் காடுகளை காலிசெய்து நிலத்தின் இயற்கை விரிப்பை நீக்காத இடங்களில் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.மீன் மற்றும் வேட்டையாடப்படும் மிருகங்கள் பறவைகள் தாராளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற பல்வேறு இயற்கை பொருட்களும் தன்னளவில் போதுமானதாக இருப்பதால் இது சமநிலையான உணவை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.பழங்கள், பருப்புகள் , பெர்ரி பழ வகைகள், கீரைகள் , சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், காளான்கள் , தேன் — நூற்றுக்கும் மேற்பட்ட இதுபோன்ற இயற்கை பொருட்களை பருவங்களில் சேகரிக்க முடியும்.ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்கு பாதுகாத்து வைக்கக்கூடிய பெரிய எண்ணிக்கையிலான உணவுப்பொருட்கள் வேளாண்மை செய்யாமலும் செய்தும் வளர்கின்றன.எள் (உட்கொள்ளக்கூடிய எண்னெயயை வழங்கக்கூடியது) , கோதுமை, அரிசி, பல்வேறு அவரை வகைகள், சோளம் மற்றும் சிறுதானியங்கள் இது போன்ற வகைகளை சார்ந்தவை. உண்மையில் கெளதம புத்தரின் நாட்களில் (கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு) சிறுதானியம் Panicum frumentaccum வேளாண்மை செய்யாமல் சேகரிக்கப்பட்டதுதானே தவிர பயிரிடப்பட்டதே இல்லை.
படம் - கரசூர் பத்மபாரதி எழுதிய நரிக்குறவர் இனவரைவியல் புத்தகத்தின் அட்டைப்படம்
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
Subscribe to:
Posts (Atom)
