இடம் மாறும் கதாபாத்திரங்கள்



ஆரண்யகாண்டம் திரைப்படத்தில் சுப்பு சப்பை என்ற இரு கதாபாத்திரங்கள் இடம் மாற்றப்பட்டு சுப்பு பாத்திரத்தில் சப்பையும் சப்பை பாத்திரத்தில் சுப்புவும் இருந்தால் படத்தை இத்தனை பேர் பாராட்டுவார்களா என்று தெரியவில்லை.சப்பை ஒரு குரூர குணம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறான்.அபலையாக ஏதும் அறியாத அப்பாவி பெண்ணாக சுப்பு வருகிறாள்.அவளை சுரண்டி சப்பை அந்த குரூர பெண்ணிடமிருந்து தப்பித்து இறுதியில் சுப்புவை கொலை செய்து பணத்துடன் தப்பித்து ஒரு ஆணாக இருப்பதன் முக்கிய விஷயமே அதுவே ஒரு பெண்ணின் உலகம் என்றெல்லாம் பேசியிருந்தால் எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்று புரியவில்லை.

இது தான் மையக் கதை என்றால் ,கதாபாத்திரங்களின் இடங்களை மாற்றினால் அது குரூரமான திரைப்படமாக மாறிவிடுகிறது.வெகுஜன சமூகத்தில் குரூரமாக கருதக்கூடிய ஒரு விஷயத்தை வெறும் கதாபாத்திரங்களை இடம் மாற்றம் செய்வதால் அற்புதமான படமாக , கலைப்படமாக மாற்ற முடிகிறதென்றால் வேடிக்கைதான்.

பேட்ட படத்தில் ஒர் ஆண் முஸ்லிம் கதாபாத்திரம் பெண் இந்து கதாபாத்திரத்தை காதலித்து கர்ப்பம் தரித்து திருமணம் செய்வதாக எடுக்கப்பட்டிருக்கிறது.இது வெறுமன கதாபாத்திரங்களை இடதிலிருந்து வலதுக்கும் வலதிலிருந்து இடத்துக்கும் இடம் மாற்றும் செயல்.அதன் மூலம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் செயல்.பேட்ட கதாபாத்திரம் ஜித்துவை தன் மகன் என நம்ப வைத்து அவனது உணர்வுகளை சுரண்டி இறுதியில் அவனிடம் அது பொய் என்று சொல்லி ஆர்ப்பரிக்கிறது.இதில் வருவது நாயகன் எதிர் நாயகன் எல்லாம் இல்லை.இதில் வெளிப்படுவது அப்பட்டமான சுரண்டல் , குரூரம்.

ஜிகிர்தண்டா திரைப்படத்தில் மைய கதாபாத்திரமான காரத்திக் தன் திரைப்படத்தின் கதைக்காக ஒரு ரெளடியை பற்றி அறிந்து கொள்ள முற்படுகிறான்.ரெளடி அதை தெரிந்து தன்னை வைத்தே அந்தப் படத்தை எடுக்கச் சொல்கிறான்.கார்த்திக் நடிக்கத் தெரியாத ரெளடியை கோமாளியாக்கி திரைப்படத்தை வெற்றி பெற செய்கிறான்.அதை கேள்வி கேட்கும் ரெளடியை எதிர்க்கிறான்.இதில் கார்த்திக் கதாபாத்திரத்திற்கு தன் கதையை கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் ரெளடி கதாபாத்திரத்திற்கு இல்லை.ஆனால் இந்த விஷயம் படத்தில் எங்கும் வரவில்லை.உண்மையில் ரெளடியின் வாழ்க்கைதான் கார்த்திக் எடுக்கப்போகும் படத்திற்கான கச்சாப்பொருள்.தன் போக்கில் தன் வாழ்வை வாழ்பவனை சுரண்டி கோமாளியாக்கி அவனை இறுதியில் நல்வழிபடுத்துகிறான் நாயகன்.இதில் அவனுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை.

இதெல்லாம் எப்படி எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல் ஏற்கப்படுகிறது பாராட்டப்படுகிறது என்றும் புரியவில்லை.நல்ல விஷூவல் என்பது நல்ல வாக்கிய அமைப்பு போன்றது.அவ்வளவுதான்.

ஆன்மிக மலர்ச்சி


2009 அல்லது 2010யில் நாகார்ஜூனனின் புத்தகம் ஒன்றின் கூட்டம் சென்னை எல்எல்ஏ பில்டிங்கில் நடைபெற்றது.அதில் தமிழவன் பேசினார்.அப்போது திராவிட இயக்கத்தின் வளர்ச்சி ,அறுபத்தியெழில் ஆட்சிக்கு வந்தபோது மாணவர்களாக இருந்த தாங்கள் எத்தனை மகிழ்ச்சி அடைந்தோம் , எப்படி நிலச்சுவான்தார்களும் பணக்காரர்களும் மட்டுமே எம்எல்ஏ ஆகிக்கொண்டிருந்த காலத்தில் மிக எளிய வேலை செய்துகொண்டிருந்தவர்கள், மாணவர்கள் அரசியல் அதிகாரம் நோக்கி வந்தார்கள் என்று பேசினார்.ஆனால் பின்னர் எல்லாம் எப்படி மாறி போய்விட்டது என்றும் பேசினார்.

நீதிக்கட்சியை இடது பக்கம் திருப்ப முயன்று தோற்றார் சிங்காரவேலர் என்று ந.முத்துமோகன் தன் இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற நூலில் எழுதுகிறார்.பிராமணர்களும் சைவப் பிள்ளைமார்களும் அடைந்த கல்வியும் அரசியல் அதிகாரமும் பிற இடைநிலை சாதிகளுக்கு சென்று சேர திராவிட இயக்கம் முயன்றது.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.திராவிட இயக்கம் ஏன் தென்னிந்திய மொழிகளை உள்ளடக்கிய நாட்டை பற்றிய ஒரு கனவை பேசியது என்றால் அப்போது மெட்ராஸ் மாகாணம் இருந்ததால் தான்.அப்போதைய புற உண்மை அது.அதில் தெலுங்கர்களும் , மலையாளிகளும், கன்னடர்களும் , தமிழர்களும் இருந்தார்கள்.மொழி வழி மாநிலம் உருவான பின் திராவிட இயக்கங்கள் தோன்றியிருந்தால் அவை திராவிட நாடு பற்றியே பேசியிருக்காது.அவை தமிழ்நாட்டை பறறி மட்டுமே பேசியிருக்கும்.

உண்மையில் அறுபதுகளில் மாணவர்களாக இருந்த தமிழவன் போன்றவர்கள் திராவிட இயக்கங்கள் பற்றி முக்கியமாக அண்ணாதுரை பற்றியும் கலைஞர் கருணாநிதி பற்றியும் எழுத முழுத்தகுதி உடையவர்கள்.சமீபத்தில் எஸ்.நாராயண் எழுதிய Dravidian Years என்ற புத்தகம் பற்றி நிறைய பேசப்பட்டது.அவர் பிராமணர் தான் என்று நினைக்கிறேன்.அவர் திராவிட இயக்கம் பற்றி முக்கியமாக கலைஞர் கருணாநிதி பற்றி மிக ஆரோக்கியமாக பேசுகிறார்.எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை துவங்கிய போது கலைஞர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வருகையால் கலைஞர் எதிர்மறையாக பாதிக்கப்பட்டார்.இல்லையென்றால் கலைஞரின் தொண்ணூறுகளுக்கு பின்னான ஆட்சி இன்னும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கக்கூடும்.

திராவிட முன்னேற்ற கழகத்தால் தமிழகம் தொழிற்துறையில் சமூக நீதியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.நீங்கள் பெரிய தரவுகள் இல்லாமல் கூட சில விஷயங்களை கவனிக்கலாம்.இன்றும் கர்நாடகம், ஆந்திரா, ஒரிசா, வங்காளம்,உத்தர் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து மென்பொருள் , பொறியியல் , மருத்துவம் போன்ற துறைகளில் பணிபுரியும் பலரும் உயர்த்தபட்ட ஜாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.தமிழகத்தை சேர்ந்தவர்களில்தான் அதிகம் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இருக்கிறார்கள்.இது திராவிட இயக்கங்களால் தான் நிகழ்ந்திருக்கிறது.

அதே நேரத்தில் பண்பாட்டு தளத்தில் தமிழகம் ஒர் ஆன்மிக சரிவை தொடர்ந்து கண்டு வருகிறது.இதை வெறுமன உலகமயமாக்கலின் பின்விளைவு என்று மட்டும் சொல்ல முடியாது.இன்று தமிழக கிராமங்களின் , சிறுநகரங்களின் பொது இயல்பு இவை.

1.பணத்தின் மீதான பெரும் இச்சை
2.சாதிப்பற்று
3. ஊர் X சேரி என்ற பிரிவு மேலும் வலுப்பெறுவது
4. எப்போதும் மற்றமையின் மீதான காழ்ப்புணர்ச்சி.

இவை திராவிட இயக்கங்களால் உருவாகவில்லை.ஆனால் இவை திராவிட இயக்கங்களின் ஆன்மிக வரட்சியால் வலுப்பெற்றுள்ளது.

பணம், தன் மக்களுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பதை தாண்டி எதன் மீதும் அக்கறை அற்ற ஒரு சமூக அமைப்பின் சிக்கல்கள் இவை.அப்படியான ஒரு சமூகத்தின் அறச்சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தின் ஆன்மிக சரிவை பற்றி பேச ஒரு தலைவரோ , இயக்கமோ, துறவியோ உருவாகி வரவில்லை.ஒப்புநோக்க நவீனத் தமிழ் இலக்கியம் மட்டுமே இதைப்பற்றி பேசியிருக்கிறது.

நவீனத் தமிழ் இலக்கியத்தை தொண்ணூறுகளுக்கு முன் பகுக்கும் போது அவை அகத்திணையிலேயே வரும்.கோட்பாடுகள், தலித்தியம் ஆகியவை அறிமுகமான தொண்ணூறுகளுக்கு பின்னரே புறத்திணை கதைகளை பேசத்துவங்குகிறது நவீனத் தமிழ் இலக்கியம்.திராவிட இயக்கங்கள் பற்றி ஏன் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் பேசவில்லை என்றால் தொண்ணூறுகளுக்கு முன்னர் அதன் சட்டகத்திலேயே அது அநேகமாக இல்லை.அது அகப்பயணம் பற்றியே அக்கறை கொண்டது.பின்னர் அது மாற்றம் கொண்டது.இன்று அகத்திணை கதைகளும் புறத்திணை கதைகளும் தமிழ் இலக்கியத்தில் எழுதப்படுகிறது.

நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் பலரும் எப்போதும் வெறுப்பையும் குழு மனநிலையையும் காழ்ப்பையும் சுமந்து அலைபவர்கள்.ஆனால் நவீன தமிழ் இலக்கியம் ஆரோக்கியமானது.தமிழகத்தின் ஆன்மிக மலர்ச்சி நவீனத் தமிழ் இலக்கியத்திலிருந்து துவங்கும்.தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்திலிருந்து அல்ல.

Data and Dostoevsky


Data is being collected in every possible way today to understand the patterns ,to do predictions , to forecast , to sell products to the customer by unicasting it to a person rather than broadcasting to masses.Corporates have their sociologists , psychologists , anthropologists , data scientists , data engineers , to understand the data and to do their predictions and forecasts.

Somewhere it is believed that Man's behaviour is predictable.That there is a pattern in Man's behaviour.That always two plus two is four.Corporates do believe that man can reduced to mere number.With sophisticated algorithms, it is believed that he could be just a simple arithmetic table.

But Dostoevksy believes otherwise.In all his Major Novels , Demons/Devils , The Adolescent ,Karamazov Brothers, Crime and Punishment , The Idiot ,Notes from the Underground , The Gambler or in Double we could see a recurring theme.That Existence precedes essence.Man is a rebel.Man is completely an unpredictable creature.Man could do something just for the sake of overcoming boredom.

Whatever might be the ideology, it has its own Shadows.As Carl Jung says the Shadow of the Man is there in the institutions/Ideology/Organizations he creates.It is big surprise , that Dostoevsky was not a German or a French but was a Russian.All his predictions about Man came true in Russia just in few decades after he died.We could see the destructions caused by Stalin to convert Russia from a peasant country to a Nuclear Power.In what way it benefitted the farmer in Russia.Man can destruct and with Ideology he can destruct even more.

Dostoevsky believed that there is no such thing called civilized man.Man is always a Man.Today's man is no different from the man of yesterday.After the end of second world war most of intellectuals around the world were disillusioned about this fact.Dostoevsky believed that the only hope for a Russian is tie himself to Russian Orthodox Church.He didn't believe that science and Technology and Socialism would benefit man.Rather he was much convinced that it would only take away the Spirit of the Man and make him spiritually dead.He worried that this person is even more dangerous than a Catholic.

If there is one thing that Dostoevsky believed it is the free will of a Man.Man is free to do anything.I'm not sure how structuralists look at Dostoevsky.He was very much against determinism.He felt that there is a disorder in Man.So to put him in any predictable model would only fail.Marx predicted that Capitalism would result in Communist Society.We believe that Mankind is progressing as a civilization.But what is the progress that we have made in all these years.What is the goal of this progress.We don't know.

By creating more Intelligent Machines and thereby reducing much of the assembly line jobs the corporate would then have more products lying in warehouse with no one to buy, as more would be then jobless.

I only wonder how Dostoevsky would have reacted to today's Technological advancements and the boredom it creates in Man.Intelligent Man are more bored today than normal Man.So these Intelligent man to overcome their boredom makes even more intelligent machines.

Dostoevsky was a genius.He was aware of Current affairs, History, Psychology which was in a very nascent stage then,Natural Sciences, Mathematics , Philosophy, Christianity, Literature.His writings are as if it is written for today's society.In a way, he has written about Man's free will than anyone else.Albert Camus's Fall is only an extension of Dostoevsky's Notes from the Underground.The Christ in Jeyamohan's Novel is only Dostoevsky's Christ.

The only hope i have for the future ,is that it might not be the way the corporates believe with all their data.It might be entirely different.That is the only hope for happiness.Otherwise if we're so sure that two plus two would be four then this world would become a big bore.Dostoevsky allows us to believe that it won't be.He believed in Man!


தமிழ் மெய்யியல்






இந்திய தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற ந.முத்துமோகனின் நூல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.இந்தியத் தத்துவங்கள் குறித்து ஒரு பகுதியும் தமிழின் தடங்களும் மற்றொரு பகுதியாகவும் இருக்கிறது.பொதுவாக இந்திய தத்துவம் பற்றிய நூல்கள் ஒவ்வொரு தத்துவம் பற்றியும் ஒர் அத்தியாயத்தை கொண்டிருக்கும்.ஆசிரியருக்கு என்று ஒரு சாய்வு இருக்கும்.அனைத்து தத்துவங்களை விளக்கும் போது அதில் எது முக்கியமானது என்ற குறிப்பு நூல் முழுவதிலும் இருக்கும்.பொதுவாக இடதுசாரி சிந்தனையாளர்கள் இந்திய தத்துவங்களை இரண்டாக பிரிப்பார்கள்.கருத்து முதல்வாதம் , பொருள் முதல்வாதம் என்று பிரித்து சாங்கியம் போன்ற தத்துவங்கள் ஆரம்பத்தில் பொருள்முதல்வாதமாக இருந்து பின்னர் புருஷன் என்ற கருத்தை உள்வாங்கி கருத்துமுதல்வாத தத்துவமாக மாறியது என்று விளக்குவார்கள்.ந.முத்துமோகனின் நூல் அப்படியான இறுக்கமான விதிகளை கொண்டிருக்கவில்லை.

தனித்த அத்தியாயங்கள் கொண்டு தத்துவங்களை விளக்கவில்லை என்றாலும் பொதுவாக பெளத்தம் , சமணம் ,ஆஜிவிகம், சார்வாகம் போன்ற தத்துவங்களை விளக்கி எப்படி வேதாந்தம் முன்வைக்கும் பிரம்மம், ஆன்மா போன்ற கருத்துக்களுக்கு இந்த சிராமண மரபு எப்படி எதிராக இருந்தது என்பதையே அவர் தொடர்ந்து விளக்குகிறார்.மண்ணின் தொல்மரபு - சிந்து வெளி நாகரீகம் - ஆரியர் வருகை  - வேதங்கள் - பிரம்மம் - ஆன்மா கருத்துக்கள் - இனத் தூய்மை - பிராமண சத்திரியக் கூட்டணி - பக்தி இயக்கம் - நிலவுடைமை - சாதியின் விரிவு என்ற சட்டகத்தை முத்தமோகன் உருவாக்குகிறார்.

இங்கு சாதிகளற்ற இயற்கையை தாய் தெய்வங்களை வழிபடும் மரபு இருந்துள்ளது.சிந்து வெளி நாகரீகம் அத்தகைய வாழ்க்கை முறையை கொண்ட நாகரீகமாகவே இருந்திருக்கிறது.ஆரியர் வருகை நிகழ்கிறது.பிரம்மம் என்ற கருத்து அவர்களின் வேதாந்தம் வழி உருவாகுகிறது.அதன் வழி இந்த உலகம் மாயை என்றும் அனைத்தும் பிரம்மம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.மேலும் நம் உடலில் சூக்கும வடிவில் ஆன்மா இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.இந்த இரண்டிலும் உடல் தூய்மையற்றது என்பதும் உலகம் பொய்யானதும் என்ற கருத்துக்களும் இருக்கின்றது.இதுவே சாதி அடிப்படையிலான சமூகத்திற்கான மூலக்காரணங்கள்.பெளத்தம் ஆன்மாவிற்கு எதிராக அனான்மவாதத்தை முன்வைக்கிறது.சமணம் ஏகாந்தவாதத்திற்கு எதிராக அநேகாந்தவாதத்தை முன்வைத்தது.பெளத்தம் வாழ்க்கை பற்றிய நோக்கு, நம் இருப்பிற்கான அர்த்தம் போன்ற மெய்யலிலுக்குள் பயணிப்பதை விட அறவியல் தளத்தில் அதிகம் பயணித்ததை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

நிலவுடைமை சமூகம் உருவாகி வந்த போது சாதிய கருத்து அந்த நிலவுடைமை சமூகத்தை நிலைநிறுத்திய உதவியது என்ற வகையில் அதை பக்தி இயக்கங்கள் மூலம் நிலவுடைமை சமூகம் சுவீகரித்துக்கொண்டது என்கிறார் முத்துமோகன்.இந்த பிரம்மம் ஆன்மா போன்ற கருத்துக்கள் ஆரியர்கள் இங்கே இருந்து பழங்குடிகளிலிருத்து தங்களை வேறுபடுத்தி தங்கள் இனத்தூய்மையை பாதுகாத்துக்கொள்ள செய்த ஏற்பாடு என்கிறார்.உபநிடதங்கள் வேதங்களின் தர்க்க ரீதியிலான விளக்கங்கள் என்கிறார்.இந்த முதற்பகுதியின் முக்கியமான சிக்கலாக எனக்குத் தோன்றியது ஆரியர் வருகை என்ற கருத்து மட்டுமே.வெளியிலிருந்து வந்த ஒரு இனக்குழூ சமூகம் தன் தூய்மையை பாதுகாக்க செய்த ஏற்பாடு தான் சாதி என்கிறார்.இதை பின்னர் சத்திரியர்களும் நிலவுடைமை சமூகங்களும் ஏற்றுக்கொண்டது என்கிறார்

ஆனால் தொடர்ச்சியாக இங்கே சிராமண மரபு இருந்தது என்றும் விளக்கம் தருகிறார்.ஆனால் இந்த ஆரியர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் , இப்படி ஒரு இனக்குழூ சமூகம் பற்றி நாம் பேசும் போது வேறு தளத்தில் இங்கே இருந்த தூய்மை வெளியே இருந்து வந்தவர்களால் கெட்டுப்போய்விட்டது என்று சொல்கிறோமா.அப்படியென்றால் நாம் மற்றொரு இனத்தூய்மை பற்றி பேசுகிறோமா.இதை தவிரத்துவிட்டு பார்த்தால் இந்த முதல் பகுதியில் பெளத்தம் குறித்தும் சமணம் குறித்தும் சாங்கியம் குறித்தும் நூலாசிரியர் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

இரண்டாம் பகுதியில் சங்க இலக்கியத்தில் வரும் ஆதிப் பொருள்முதல்வாதப் பண்பாடு, பின்னர் புறநானூறு, அகநானாறு ஆகியவற்றில் தோன்றும் ஆண் பெண் தன்னிலைகள் , தொல்காப்பியம் காட்டும் திணைக் கோட்பாடு ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறார்.மணிமேகலை , சிலப்பதிகாரம் ஆகியவற்றில் வரும் பெண்கள் பற்றிய மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார்.  சைவ சித்தாந்த்தத்தின் வளர்ச்சி பற்றியும் அது எப்படி பல்வேறு இந்திய தத்துவகங்ளிலிருந்து தன் பார்வை எடுத்துக்கொண்டது என்பதையும் அதே நேரத்தில் நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை கணக்கில் கொண்டு தன் தத்துவத்தை  வரையறைத்தையும் சொல்கிறார்.

தமிழ் சமூகத்தின் புதிய குரல்கள் என்ற அத்தியாயத்தில் வள்ளலார் , அயோத்திதாசர், பெரியார் , சிங்காரவேலர் ஆகியோரை பற்றி சற்று விரிவாக எழுதியிருக்கிறார். ஆறுமுகநாவலர் தூய சைவத்தை உருவாக்கிய போது வள்ளலார் அத்தகைய சைவத்திலிருந்து விலகி பெருங்கருணை மட்டுமே இறை என்ற ஜீவகாருண்யத்தை முன்வைக்கிறார்.அவரின் அறவியல் பசித்தவர்களுக்கு அண்ணமிடும் கருணை.சைவத்தின் வளரச்சியும் தமிழ் அடையாளமும் எங்கோ இணைந்துவிடுகிறது என்பதையும் பல இடங்களில் நூலாசிரியர் சொல்கிறார்.அயோத்திதாசர் இங்கே இன்று தீண்டப்படாதவர்களாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பூர்வ பெளத்தர்கள் என்று சாக்கிய பெளத்த மீட்டுருவாக்கத்தை முன்வைத்தது பற்றி எழுதுகிறார்.அதேபோல பெரியாரிடம் இருந்த பெளத்த சிந்தனைகளின் தாக்கம் பற்றியும் சொல்கிறார்.

சிங்காரவேலர் வழக்கிறஞராக இருந்து , பெளத்த தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு , பின்னர் மார்க்ஸியம், பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம் என்று பயணப்பட்டதை பற்றி சொல்கிறார்.சிங்காரவேலர் சுயமரியதை இயக்கத்தை இடதுபக்கம் திருப்ப எவ்வளவு முயன்றும் அது தோல்வியில் முடிந்ததை பற்றி குறிப்பிடுகிறார்.

அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் ஆகியயோரின் செயல்பாடுகளில் பெளத்த தத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(பெரியார் எந்தளவு பெளத்தம் கற்றார் என்று தெரியவில்லை!). அதே நேரத்தில் அயோத்திதாசர் சாக்கிய பெளத்தத்தை முன்வைத்த போது சிங்காரவேலர் அதிலிருந்து வேறுபடுகிறார்.பெளத்தம் அடிப்படையில் ஒர் அறவியல் கோட்பாடாக ஒரு மெய்யிலாக இந்திய சூழலில் சாதியத்திற்கு எதிரனாதாக வேதாந்தத்திற்கு  எதிரான சிந்தனையாக பலரையும் ஈர்த்திருக்கிறது.மணிமேகலை போன்ற காப்பியங்கள் முழுக்க பெளத்தத்தை முன்வைப்பவை.வள்ளலார் எந்தளவு பெளத்த, சமண தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை.இதைப்பற்றி யாரும் எழுதவில்லை.வள்ளலார் தன் இறுதிக்காலத்தில் முன்வைத்தவை கிறுஸ்துவ கருத்துக்களே என்று சொல்வோர் உண்டு.இவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை.

இந்திய முழுவதிலும் பொதுவாக எது இருந்தது என்ற கேள்விக்கு சாதி என்று அவர் பதலிளிக்கிறார்.சாதியின் வேர்கள் வேதாந்த தத்துவத்தில் இருக்கிறது என்கிறார்.அதற்கு மாற்றான சிந்ததனைகளாக பெளத்தம் , ஆஜிவிகம், சமணம், சாங்கியம், சார்வாகம் ஆகிய இருந்தன என்கிறார்.பெளத்தம் எப்படி இந்திய சிந்தனையாளர்களுக்கு ஒர் அறவியலாக மெய்யிலாக தொடர்ந்து இருந்தது இருக்கிறது என்கிறார்.இதே சிந்தனையாளர்களின் பலர் மார்க்ஸியம் நோக்கி சென்றதையும் குறிப்பிடுகிறார்.முக்கியமான நூல்.

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் - ந.முத்துமோகன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

புகைப்படம் : https://commons.wikimedia.org/wiki/File:Sathya_gnana_sabha,_vadalur_1.jpg