சார்வாகன் சில குறிப்புகள்





எழுத்தாளர் பாரவி சார்வாகன் பற்றி நிறைய விஷயங்களை இந்தப் பேச்சில் சொல்லியிருக்கிறார்.சார்வாகன் ஒரு மருத்துவர், தொழு நோய் சிகிச்சை நிபுணர், அவர் கண்டுபிடித்த அறுவை சிகிச்சை முறை அவரின் பெயராலேயே உலக அளவில் பின்பற்றப்படுகிறது என்பது போன்ற செய்திகள் ஆச்சரியமானவை.

அநேகமாக பாரவிக்கு சார்வாகனை நாற்பது வருடங்களுக்கு மேலாக தெரியும் என்று நினைக்கிறேன்.ஆனால் இந்தப் பேச்சில் கூட அதே பிரமிப்புடனும் பிரயத்துடனும் பேசியிருக்கிறார்.இதுவே சார்வாகன் என்ற மனிதரை நாம் அறிந்துகொள்ள போதுமான செய்தியாக இருக்கிறது.
நாற்பதுகளில் ஐம்பதுகளில் இங்கே மருத்துவம் படித்து ,பின்னர் மேற்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய பல மருத்துவர்கள் முற்றிலும் சேவை மனப்பாண்மையோடு இருந்ததை அறிய முடிகிறது.நானே ஜெய்க்கர் என்ற மருத்துவரை சந்தித்திருக்கிறேன்.அவர் சிகிச்சைக்காக பணம் வாங்கவில்லை.தம்பையாவை பற்றி கேள்விப்பட்டியிருக்கிறேன்.ஷாஜி கூட உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்த இலட்சியவாதம் இன்றில்லை.எந்த துறையிலும் இல்லை.அது அந்தக் காலகட்டத்தின் விளைவு என்று கூட தோன்றுகிறது.

நாம் ஒரு இக்கட்டான சூழலில் கொந்தளிப்பான சூழலில் நாம் அதுவரை கொண்டிருந்த மதிப்பீடுகள், விழுமியங்களை தடுமாற்றத்தால் விட்டுவிடுகிறோம்.அப்படி செய்யாமல் இருக்க இலட்சியவாதம் தேவை என்றே நினைக்கிறேன்.அதுவே நம்மை தொலைந்து போகாமல் காப்பாற்றுகிறது.சார்வாகன் போன்ற எழுத்தாளர்கள் மூலம் நாம் அதை கண்டடையலாம்.




No comments: