தலைமையாசிரியரின் லைக்குகள்






வைத்தியலிங்கம் மரணமடைந்த செய்தி
தலைமையாசிரியரை வருத்தமடையச் செய்தது.
வைத்தியலிங்கம் மரணமடையும் முந்தியதினம் வரை
தலைமையாசிரியரை தொடர்ந்து விமர்சித்தார்.


பால்ய காலத்தில் தான் பல்ப்பங்களை திருடியதைப் பற்றி
வைத்தியலிங்கம் எழுதிய போதும்
தலைமையாசிரியர் அமைதிகாத்தார்.

ஆனாலும் தன் தலைப்பாகையில் எப்போதும் இரண்டு
வாழைப்பழங்களை வைத்திருப்பார் என்ற நிலைத்தகவல்தான்
அவரை மிகவும் வருத்தமடையச் செய்தது.

எப்போதும் துக்கத்தை அனுஷ்டிக்க
இரண்டு டஜன் வாழைப்பழங்களை
ஒரேயடியாக விழுங்குவார் தலைமையாசிரியர்
என்ற வைத்தியலிங்கத்தின் நிலைத்தகவலுக்கு
இரண்டு டஜன் வாழைப்பழங்களை முழுங்கியவாறு
லைக்கிட்டு அழுதார் தலைமையாசிரியர் சந்திரகுமாரன்.

No comments: