உங்கள் வீட்டின்
வெளிவாசல் சாத்தப்பட்டுவிட்டது
வீட்டில் யாருமில்லை
நீங்கள் வணங்கவோ வன்மம்
கொள்ளவோ
கடவுள் இல்லை
உங்கள் ஆடைகளை துறந்து
புரட்சி செய்ய
எந்த சித்தாந்தமும்
இல்லை
நீங்கள் கொலை செய்யவோ
கிழித்தெறியவோ
உங்கள் பிரதேசத்தில்
மனிதர்கள் இல்லை
உங்கள் மலத்தையே
நீங்கள் உண்பதற்கான சூழற்சி இயந்திரம்
உங்கள் உடலில்
பொருத்தப்பட்டுவிட்டது
நிலைக்கண்ணாடியில்
உங்கள் உருவத்தை
பார்த்தவாறு நீங்கள்
நிலையமைதி கொள்ளலாம்
இனி நீங்கள் செய்ய
ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment