விழுமியங்களின் வீழ்ச்சி




ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வசனம் எழுதுவதை பற்றி பல எழுத்தாளர்கள் பல விமர்சனங்களை வைக்கிறார்கள்.ஒரு எழுத்தாளர் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் ,பத்திரக்கையில், கல்லூரியில் வேலை செய்யலாம் என்கிற போது ,வட்டிக்கு விடலாம் என்கிற போது , கடை வைத்திருக்கலாம் என்கிற போது சினிமாவிற்கு வசனம் எழுதுவது மட்டும் ஏன் மிகப்பெரிய அளவில் விமர்சிக்க படுகிறது.சினிமா ஒன்றும் Illegal business அல்ல.எழுதுவது அவர்களின் தொழில்.அவர்களின் எழுதும் திறமையை திரைப்படத்துறையில் பயன்படுத்துக்கொள்ள சிலர் விரும்புகிறார்கள்.இவர்கள் எழுதுகிறார்கள்.இதில் என்ன பிரச்சனை.ஏன் ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் பங்களிக்கும் திரைப்படங்கள் தோல்வி அடையும் போது, அவற்றில் ஏதாவது தவறு இருக்கும் போது மிகப்பெரிய அளவில் இவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்.நிறைய எழுத்தாளர்கள் கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.ஒரு கார்ப்ரேட் என்பது தனித்து இயங்கும் தீவு அல்ல.ஒரு கார்ப்ரேட் மற்ற கார்ப்ரேட்களோடு இனைந்து செயல்படுகிறது.ஒரு கார்ப்ரேட்டிற்கு தேவையான உபகரணங்களை வேறு ஒரு நிறுவனம் அளிக்கிறது.எல்லா நிறுவனங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.ஒரு பழங்குடி சமூகம் கானகங்களிலிருந்து விரட்டப்படுவதும், கூடங்குளத்தில் அனுமின் நிலையம் வருவதற்கும், விவசாய நிலங்கள் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தபடுவதிலும்,கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் எழுத்தாளருக்கும் சம்மந்தம் உண்டு.A Collective Sin.இவைகளை நாம் செளகரிமாக மறந்துவிடுகிறாம்.இன்று எல்லா இடங்களிலும் விழுமியங்கள் தோற்றுவருகின்றன.ஒரு எழுத்தாளன் வெறும் எழுத்து தொழிலை மட்டும் நம்பி வாழ்வதற்கான சூழல் முற்றிலும் இல்லை.அவர்கள் அவர்களின் திறமை செல்லுபடியாகும் இடத்தில் வேலை செய்து அதற்கான ஊதியத்தை பெறுகிறார்கள்.ஜெயமோகனின் புனைவுகள் இயல்பிலேயே அதீத நாடகீயத்தருணங்களால் ஆனவை.வெகுஜன சினிமாவில் நாடகீயத்தருணங்களையும் , அதை முன்னெடுக்கும் வசனங்களையும் அவரால் பல இடங்களில் நன்றாக எழுத முடிகிறது.தொடர்ந்து எழுதுகிறார்.அவ்வளவுதான்.இவைகளில் சில விழுமியங்கள் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாம், இருக்கிறது.ஆனால் அது எல்லா துறைகளிலும் இருக்கிறது.வீடை கடந்து சாலைக்கு வந்தால் நமது ஒவ்வொரு செயலும் அறரீதியில் விழுமியங்கள் ரீதியில் நமக்கு பெரிய குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய சூழலில் தான் இருக்கிறோம்.அத்தகைய சூழலில் வைத்துதான் இது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட எழுத்தாளர்கள் மீது விமர்சனங்களை வைப்பதற்காக பயன்படுத்துவது முற்றிலும் சிறுபிள்ளைத்தனமானவை.இவைகளில் தனிப்பட்ட காழ்ப்பு முற்றிலும் தேவையற்றது.அசோகமித்திரன் போல வாழ்வது இன்றைய சூழலில் முற்றிலும் சாத்தியமற்றது.

No comments: