மாலையில் என் பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு நகர வீதிகளில் உலாவினேன்.வித்தைகள் பல செய்துகொண்டிருந்த கோமாளியை பார்த்ததும் குழந்தை அங்கேயே நின்றுகொண்டாள்.அவன் எது செய்தாலும் குழந்தை சிரித்தாள்.மறுநாள் சென்றபோது ஒரு கழைக்கூத்தாடியின் உடலை வைத்துக்கொண்டு கோமாளி அழுதுகொண்டிருந்தான்.கழைக்கூத்தாடி அவனது மகனாக இருக்க வேண்டும்.வித்தையின் போதான விபத்தை குறித்து நிறைய சொன்னார்கள் அருகிலிருந்தவர்கள்.குழந்தை கோமாளியை நோக்கி கையை ஆட்டியபடி சிரித்தபடி இருந்தாள்.வீடு திரும்பும் போது குழந்தையிடம் சொல்லத்தோன்றியது - 'பூக்குட்டியே, நமக்கு கோமாளிகளிடம் பழக தெரிந்திருக்க வேண்டும்.கோமாளிகள் கோமாளிகள் மட்டும் இல்லை என்ற ரீதியில்'.பூக்குட்டி வீடு வந்ததும் எதையோ சொல்ல உற்சாகத்தோடு உள்ளே ஒடினாள்.
கோமாளி

பகுப்புகள்:
உளறல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
குழந்தைக்கு என்ன தெரியும்...
கோமாளியின் நிலை நினைத்து மனம் வேதனைப்பட்டது...
Post a Comment