இந்தியாவின் தொழில்மயம் - 1புது மார்க்சியர் - ஹெர்பர்ட் மார்க்யூஸாவின் ஒற்றை பரிமாண மனிதன் என்ற புத்தகத்திலிருந்து இந்தியா போன்ற நாடுகளின் தொழில்மயமாதல் பற்றி பகுதியின் மொழிபெயர்ப்பு. 1964ல் முதல் பதிப்பு.


பின்தங்கிய நாடுகளின் புதிய வளர்ச்சி , முன்னேறிய தொழில்மயமான நாடுகளின் எதிர்கால வாய்ப்புகளை மாற்றக்கூடியதாக மாத்திரமல்லாமல் அவை மூன்றாவது சக்தியாக தன்னை நிறுவிக்கொண்டு அதன் மூலம் ஒப்பிட்டளவில் தனித்த அதிகாரம் கொண்டதாகவும் மாறக்கூடும் என்ற அபிப்பிராயம் அடிக்கடி சொல்லப்படுகிறது.இதைக் குறித்து நான் சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன். அரை காலனிய நாடுகள் அல்லது காலனிகளாக இருந்த நாடுகள் , முதலாளித்துவமும் அல்லாத கம்யூனிசமும் அல்லாத மாற்று வழியில் தன் தொழில்மயமாதலை மேற்கொள்ளும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா?இந்த நாடுகளின் தனதேயான கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் அப்படியான மாற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா? தொழில்மயமாதலில் தன்னை ஏற்கனவே ஈடுபடுத்திக்கொண்ட பின்தங்கிய மாதிரிகள் பற்றி மட்டும் எனது எண்ணங்களை வரையுறுத்தி கொள்கிறேன்.அதாவது - தொழில்மயமாதலும் தொழில்மயமாதலுக்கு முன் மற்றும் எதிர் கலாச்சாரமும் ஒன்றாக இயங்கும் நாடுகளை பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.(இந்தியா , எகிப்து)

உற்பத்தித்திறன் , பயன்திறன் , தொழில்நுட்ப பகுத்தறிவு என்ற விழுமியங்கள் பற்றிய பயிற்சியற்ற மக்களை கொண்டு இந்த நாடுகள் தொழில்மயமாதலுக்குள் நுழைகிறது.வேறு வார்த்தைகளில் என்றால் - உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு உழைக்கும் சக்திகளாக உருமாற்றப்படாத மக்கள் வெகுவாக இருக்கக்கூடிய நாடுகள் இவை.இந்த சூழல்கள் தொழில்மயமாதலும் விடுதலையும் புது வகையில் ஒன்றினைய உதவக்கூடுமா - முக்கியமாக வேறு விதமாக உருவாகக்கூடிய இந்த தொழில்மயம் கட்டமைக்கும் உற்பத்தி சாதனம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை மட்டுமல்லாது அவர்களின் இருப்புகான போராட்டத்தை ஆசுவாசப்படுத்த கூடியதாகவும் இருப்பது சாத்தியமா?

(தொடரும்)

-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 19711 comment:

rvelkannan said...

அவசியமான பதிவு ... தொடர்க . வெகுவான எதிர்பார்ப்புடன் ... வாழ்த்துகள்