கலீலியோ கலிலி - நாடகம்

 

பெர்டோல்டு பிரெக்ட் எழுதிய கலீலியோ கலிலியின் சரிதம் என்ற நாடகப்பிரதியை அடிப்படையாக கொண்டு பெங்களூரு லிட்டில் தியேட்டர் அமைப்பு அரங்கேற்றிய நாடகத்தைப் பார்த்தேன். ஸ்ரீதர் ராமனாதன் என்பவர் இயக்கியிருக்கிறார்.இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான கால அளவு கொண்ட கதை.நன்றாக வடிவமைத்திருக்கிறார்கள். கோரமங்களாவில் மேடை என்ற அரங்கத்தில் இன்று நிகழ்ந்தது.இந்த மேடை அமைப்பினர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். 

முன்னர் வினோத் குமார் என்பவர் கலீலியோ பற்றி எழுதிய இரு துண்டு கண்ணாடி வில்லைகள் என்ற நூலை வாசித்திருக்கிறேன்.நல்ல புத்தகம்.தான் அறிந்த உண்மையை உண்மை என்று அதிகாரத்திற்கு எதிராக நின்று உரக்கச் சொல்வது மிகவும் கடினம்.இந்த நாடகத்தில் ஒரு வரி வருகிறது."You are the slave of your passion".கலீலியோவின் மருமகனாக ஆக இருந்தவர் சொல்லும் வாசகம்.அத்தகையவர்களால் தான் அதிகாரத்தை எதிர்த்து தான் அறிந்ததை அச்சமின்றி உரைக்க முடியும். இன்றும் பல துறைகளில் கலீலியோக்கள் அதிகாரத்தை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.தண்டனைகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் கலீலியோக்கள் இறுதியில் நிலைக்கிறார்கள்.


No comments: