தமிழகத்தில் ஆசிவகர்கள்


பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணனுடன் சென்ற வருடம் பேசிக்கொண்டிருக்கையில் ஆஜீவகம் பற்றி ஏ.எல்.பாசாம் எழுதிய புத்தகம் பற்றி கேட்ட போது அதை விட சிறந்த புத்தகம் தமிழில் ர.விஜயலட்சுமி எழுதியிருக்கிறார் என்றார்.இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.இந்தப் புத்தகம் 1988யில் முதலில் வந்திருக்கிறது.இப்போது கிழக்கு பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது.

மணிமேகலை , நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் ஆஜிவகம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை பற்றி எழுதியிருக்கிறார்.ஊழ் என்ற கருத்து எப்படி விதி மற்றும் கர்மவினையில் இருந்து மாறுபட்டது என்பதை விளக்குகிறார்.தமிழிலக்கியத்தில் ஊழ் எப்படியெல்லாம் அர்த்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்.

மேலும் தமிழிலக்கியம் தவிர்த்து ஆஜிவகம் பற்றிய வேறு சான்றுகளை பற்றி எழுதுகையில் பாசாம் தன் நூலில் கூறிய கல்வெட்டு சான்றுளை பற்றி ஆராய்கிறார்.ஆனால் அந்த கல்வெட்டு சான்றுகள் ஆஜிவகர்களை குறிக்கவில்லை என்றும் அது ஆசுவி என்று குதிரை வைத்திருப்போரை குறித்திருக்க வேண்டும் என்று விளக்கி பாசாமை மறுக்கிறார்.

ஆஜிவகம் பற்றிய நல்ல ஆய்வு நூல்.இதை கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் ஆசிவகர்கள் - முனைவர் ர.விஜயலட்சுமி - கிழக்கு பதிப்பகம்.

No comments: