அம்ரிதா ப்ரீதம் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசித்தேன்.ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.குஷ்வந்த் சிங் Stench of Kerosene என்ற கதையை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு வெளியே ஒரு கிராமத்து சிறு பெண்ணிற்கு பெரிய காரணங்கள் இல்லாமல் தோன்றும் காதலை பற்றிய கதை The weed. Stench of Kerosene கதையில் குழந்தை பெற இயலாத பெண்ணை துறந்து வேறு பெண்னை திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தையை தொடும் போது அவனுக்கு மண்ணெண்ணெய் வாடை அடிப்பதால் குழந்தையை எடுத்து சென்றுவிடுமாறு இரண்டாவது மனைவியிடம் பதறுகிறான்.
Aerial கதையில் ஒருவனை காதலித்து வீட்டைத் துறந்து திருமணம் செய்து
கொள்ளும் பெண் அவன் வேறொரு பெண்ணுடான உறவை பற்றி சொல்லும் போது
அவனிடமிருந்து விலகுகிறாள்.அவள் அவனிடம் மண்டியிட்டு கதற வேண்டும் என்று
அவன் விரும்புகிறான்.வீட்டைத்துறந்து தன்னிடம் வந்து பலவீனமாக நின்ற
பெண்னைத்தான் தான் காதலித்தாக சொல்கிறான்.அவள் இனி அப்படி செய்ய இயலாது
என்கிறாள்.அவனால் அவனை அதன் பின் காதலிக்க முடியவில்லை.இந்த கதை ஒரு
வாசகரிடம் நேரடியாக பேசுவது போல Second personனில் எழுதப்பட்டுள்ளது.நல்ல
உத்தி.
Reflections என்ற கதை சோபா சிங் என்ற ஓவியர் உடைந்திருக்கும் கண்ணாடி சில்லுகளில் தன் பிரதிபலிப்பை பார்த்து சிந்திக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றிய கதை.அவர் வாழ்வில் வந்த பெண்கள்.அவரின் தந்தை பற்றி யோசிக்கிறார்.இந்த கதையில் ஒரு நல்ல வரி வருகிறது.ஒருவன் தன் சுயத்தில் தன் தந்தையை பார்க்கிறான்.(A Man sees his father in his own self) என்ற வரி பிரமாதமான வரி.பெண்கள் வளர்ந்து அவர்களின் அண்ணைகளாகவும் ஆண்கள் வளர்ந்து அவர்களின் தந்தைகளாகவும் ஆகிறார்கள் இல்லையா.கண்ணாடியில் பார்க்கும் போது தன் தந்தையை பார்க்காத மகன் இருக்க முடியுமா.தான் வெறுத்த தன் தந்தையின் பலவீனங்களை தடுமாற்றங்களை தன்னில் பார்க்கும் மகனின் நிலை எப்போதும் இலக்கியத்திற்குரியது.
A Letter from Guliyana என்ற கதையில் பூமியில் சுதந்திரமாக வேர் விட்டு வளரும் மரம் போல ஒரு பெண்ணிற்கான சுதந்திரம் இருக்க வேண்டும் என்கிறார்.அது மண்தொட்டியில் வளரும் செடி போன்று இருக்கக்கூடாது என்கிறார்.அதற்கு அவள் பயமின்றி சுற்றித்திரியும் சுதந்திரம் வேண்டும்,அதற்கான சூழல் வேண்டும் என்கிறார்.
The Third woman என்ற கதை போரில் கணவன் இறந்த பின் தன் பிறந்த வீடு வரும் மீனா என்ற பெண்னை பற்றியது.இப்போது வளர்ந்து நிற்கும் அவளது சகோதரியின் மகன் அவளை மீனு என்று அழைக்கிறான்.அவளில் ஒரே நேரத்தில் தன் கணவன் தன்னை மீனு என்று அழைத்ததும் தன் கருவில் உருவாகமலே போன குழந்தையும் இணைந்து அவளை குழப்புகிறது.கணவன் இறந்து போகும் போது ஒரு பெண் இறக்காமல் போகலாம், ஆனால் அவளது கருப்பை இறந்து போகிறது என்ற வரி வருகிறது.அந்த உறவுக்குப் பின் அவள் இறந்து பிறக்கிறாள்.மிகவும் சிக்கலான கதை.
Mr.Know it all,ஒரு கட்டிட ஒப்பந்தகாரர் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று மேஸ்தி்ரியிடம் அறிவுறுத்துகிறார்.கதையில் இறுதியில் அந்த ஒப்பந்தகாரரின் மனைவி காணாமல் போய்விடுகிறார்.அப்போது அந்த கட்டிடத்தில் வேலை செய்யும் பெண் மேஸ்திரியிடம் ஒப்பந்தகாரர் தனக்கு அணைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.உண்மையில் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்கிறாள்.
இந்த தொகுப்பில் உள்ள கதைகள் பெண்ணின் காதல் , அவர்களின் அக விடுதலை , அவசியப்படும் சுதந்திரம் அதற்கு தடையாக இருக்கும் சூழலின் அச்சுறுத்தல் , பெண்னைப் பற்றி ஏதுமறியாத ஆண் ஆகியவற்றை குறித்து கூர்மையாக பேசுகிறது.நல்ல தொகுப்பு.