ஒற்றன்ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமையானது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஏப்படி இவரால் இவ்வளவு அகங்காரம் இல்லாமல் எழுத முடிகிறது. துளிகூட கர்வம் இல்லை.ஆச்சரியம்.காந்தியை உண்மையாகவே உள்வாங்கி கொண்ட எழுத்தாளர். எழுதுவது ஒரு பயிற்சி.ஆட்டோ ஒட்டுவது போல.அவ்வளவுதான் என்கிறார்.இப்படிப்பட்ட ஆளுமைகள் ஆபூர்வம்.

ஒற்றன் அயோவா பல்கலைக்கழகத்திற்க்கு அசோகமித்திரன் ஏழுமாத காலம் அழைப்பின்பேரில் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களால் எழுதப்பட்டது.புற உலகை கூர்ந்து கவணிப்பது எழுத்தாளனின் முக்கியமான மன அமைப்பு.அப்படி இல்லாதவர்கள் எழுதும் போது பெரும்பாலும் அது சுயசரிதை ஆகிவிடுகிறது.அப்படிபட்டவர்களுக்கு குறைந்தபட்சம் நேர்மையாவது வேண்டும். அசோகமித்திரன் புற உலகை எளிதில் உள்வாங்க கூடியவராகயிருக்கிறார்.நேர்மையானவர்.அவரை படிக்கும் போது ஒரு goodness உருவாகிறது.
கிளர்ச்சியையோ,குழப்பத்தையோ எழுத்து ஏற்படுத்தக்கூடாது என்கிறார்.அமெரிக்கா சென்றவர் முயன்றிருந்தால் அங்கேயே தங்கயிருக்கலாம். ஏன்?இங்கேயே கூட ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம். செய்யவில்லை. அம்ஷன்குமார் இயக்கத்தில் அவரைப்பற்றிய ஆவணப்படம் அவர் ஆளுமையின் முக்கிய பதிவு.

ஒற்றன் நாவலில் ஒரு அத்தியாத்தில் மாணவி ஒருத்தி அவரை காதலிப்பதும்,இவர் தன் வீட்டு மனிதர்கள் புகைப்படத்தை காட்டி அதை மறுப்பதும் அழகானவை.

ஒற்றன் - காலச்சுவடு வெளியீடு

No comments: