அறநெறி





அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

இந்த குறளுக்கு என்ன பொருள் கொள்ளலாம்.என்ன வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் என்பதே சூழல்.

பல்லக்கு சுமப்பவனிடமும் அதில் ஊர்ந்து செல்பவனிடத்தும் அறநெறி இதுவென சொல்ல வேண்டாம் என்னும் பொருள் சரியென படுகிறது.அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கான அரசியல் உண்டு.அரசியல் கருத்துகளால் ஆனது.அந்த கருத்தியல் அறத்தின் வழி நிற்பதற்கான சாத்தியங்கள் கண்டிப்பாக இல்லை.அதுவே வரலாறு.
கம்யூனிசமும், சோவியத் ரஷியாவின் வீழ்ச்சியும் அதில் நமக்கு கிடைத்திருக்கும் கடைசி ஆவணங்கள்.அதே நேரத்தில் ஒவ்வோரு சமுதாயத்திற்க்கும் அதற்கான சராசரித்தனம் உண்டு.
அறத்தின் குரலாய் ஒரு சமுதாயம் ஒலிப்பதற்கான சாத்தியங்களும் இல்லை.

இதைத்தான்,இந்த குறளின் பொருளைத்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் , விஷ்ணுபுரம் நாவல்கள் இரண்டும் விரிந்த அளவில் சொல்கிறது.


அறத்தின் குரலாய் ஒலிக்காத சமுதாயம், அறநெறியற்ற அரசை எப்படி எதிர்கொள்ளும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

அரசின் செல்வத்தை அழிக்கும் இந்த படை உருவாக்கும் அரசும் அப்படியேன்று கொள்ளலாமா.
அப்படித்தான்.பெருங் கணவுகள் தோற்கின்றன.இது சோர்வை ஏற்படுத்தும் உண்மை.








No comments: