வடபழனி



சிமெண்ட் நிறத்திலான சட்டை அனிந்த பெண். ஸ்தனங்கள் கச்சிதமாக இருந்தன.புகைப்படம் எடுத்து கணினிக்குள் ஊட்டி காட்டினான்.அவள் ஒன்றும் சொல்லவில்லை.புகைப்படத்தை அச்சிட்டு வெளியே எடுத்த போது தான் அவளது பகுஅறிவு கீரிச்சிட்டது.அவளது சட்டை சிமெண்ட் நிறம்.பின்பக்கத்து தீரைச்சீலை சிமெண்ட் நிறம்.அவள் வெளிர் நிறம்.பார்க்கையில் அவளது முகம் தீரைச்சீலையில் ஒட்டப்பட்டுயிருந்த்து போலயிருந்த்து.சொல்லியிருக்க வேண்டும் என்றாள்.அச்சிடவதுற்கு முன்பாகவேனும் சொல்லியிருக்க வேண்டும் என்றான்.முடியாது எனறாள்.மின்சாரம், கணினி, புகைப்பட கருவிகள் , வாடகை.வயது வேறு முப்பத்தி எட்டு.யாரும் பெண் தரவில்லை.நிரந்தர வேலையில்லையாம்.கத்தினான்.அவளுக்கு சிரிக்க வேண்டும் போல இருந்தது.காசை கொடுத்துவிட்டு புகைப்படம் வேண்டாமென சொல்லி கிளம்பினாள்.தீரைச்சீலையை ரத்த நிறத்திற்கு மாற்றினான்.அவள் புகைப்படம் எடுக்க நின்றாள்.

பொக்கை பல் தெரிய சிரித்தார் கிழவர். செயற்கை வெளிச்சம் பளீரென்று அறையை நிறைத்தது.'கீளிக்' சத்தம்.பழனிக்கு வடக்கே தமிழ் கூறும் நல்லுலகத்தின் கருத்துலகம் உருவாகும் வடபழனி கோயிலின் தெற்கு கோபுரம் இருக்கும் தெருவில் ஒரு புகைப்பட ஸ்டுடியோவில்.கணினியில் அவரது புகைப்படத்தை பார்த்தார்.அவர் அதுவரை தனியாருக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை.புகைப்படத்தில் படக்காரன் சில மாற்றங்கள் செய்தான்.தாடியை பிடுங்கினான்.பொக்கை பல்லை மறைத்தான்.சற்று செவப்பு சாயம் பூசினான்.மீசையை டீரிம் செய்தான்.பார்த்தாவாறு நின்றார் கிழவர்.அழகுபடுத்துகிறேன் என்றான் புகைப்படக்காரன்.வேண்டாம்.என் முகம் அல்ல இது.இது நிழல்.நிழல் என்னுடையது.அப்படியே இருக்கட்டும்.அவர் நின்ற நிலையில் அவன் உட்கார்ந்திருக்க அவன் தலைமூடி சீவப்பட்ட ஆனால் இன்னும் ஒட்டை போடாத இளநீர் போல் காட்சி தந்தது.சிரித்தார்.ஏன்.சொன்னார்.இந்த வயதிலும் இவ்வளவு மூடி இருக்கிறதல்லவா அந்த கொழுப்பு என்றான். இரண்டு போதும் புகைப்படம். என்றார்.ஏன் திடீரென்று புகைப்படம் எடுத்து கொள்கீறிர்கள்.தெரியவில்லை.

அன்றைய இரவில் அவருக்கு நல்ல வியாபாரம்.கடை சாத்தி வண்டி எடுத்தான் புகைப்படகாரன்.பளம் சாப்படறது.இரண்டு பழங்கள் தின்று தோள்களை அருகில் கிடாசினான்.இருட்டில் உங்கள் புகைப்பட கருவி என்னை படம் பிடிக்குமா.முடியாது.எப்போதும் அதற்கு வெளிச்சம் தேவை,எந்த வகையிலெனும்.சூரியன் இருந்தால் நிழல் சரியா.சரி.பள வியாபாரம் பலே.ஆம் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு கிரவுண்ட் வாங்கியாகிவிட்டது.கோபிக்காதீர்கள்.உங்க வியாபாரம் எப்படி.புகைப்படக் கடைகளின் காலம் முடிவுக்கு வருகிறது.நான் கடைசி தலைமுறை.விஞ்ஞானத்தின் வளர்ச்சி எங்களை தேவையற்றவர்களாக்கி விடும்.வடவேங்கிடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம், தெரியுமா உங்களுக்கு.தொல்காப்பியம்லா தெரியுதே உனக்கு ஆனா மாத்தனும்.வடவேங்கிடம்ன்னு இனி சொல்லமுடயுமா.வேன்னா வடபளனின்னு மாத்திக்கலாம்.இப்படி இல்லாவிட்டால் நாம் எவ்வளவு நன்றாக இருக்கலாம்.எப்படி இருக்காவிட்டால்.தமிழ்நாடு தமிழ்ர்களுக்காக தனித்து இருந்தால்.சிரித்தார்.நம் வரி அவனுக்கு செலுத்தி அவன் நமக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும். நாம் உருவாக்குவோம் நமக்கான சமூகத்தை.நம்மவர்கள் செத்துக்கொண்டிருக்கையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவர்களை நோக்கி நிற்கிறோம்.அரசின் பிரதிநிதி , இவர் மாநில அரசு தான், ஆனால் சமயங்களில் மத்திக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் வந்தார்.காகித நோட்டை கொடுத்தார்.அவர் சென்று விட்டார்.இவர்கள் ஏன் மாவோயிஸ்ட்கள் மேல் அவ்வளவு கோபம் கொள்கிறார்கள் தெரியுமா.ஏன்.அவர்கள் வந்தால் இவர்கள் இல்லாமலாகி விடுவார்கள்.சரி.எல்லாம் சரி தான்.கிளம்பினான்.மறுநாள் நேற்றைய உரையாடல் பற்றி பேச்சு கொடுத்தான்.அவர் ஒன்றும் சொல்லவில்லை.கருத்து கூற மறுத்துவிட்டார் செய்தி போடலாம் இதோ புகைப்படம் செய்தி அருகே போட.கொடுத்தார்.கோபித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

பல மாதங்கள் பிறகு அவரை காணவில்லை.யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.மத்திய இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருந்தார் கிழவர்.வெயில் பெய்துகொண்டிருந்தது.தேங்காய் நாறை போன்ற தாடியில் பொதிந்த முகம்.கூரிய நாசி.வறுமை இறுக்கிய உடல்.இந்தியாவின் கிராமங்களும் அதன் பிரச்சனைகளும் ஒன்று தானோ என்று எண்ணியவாறு சென்றுகொண்டிருந்தார்.அரசு அலுவலகம்.அவன் பெயர் சொல்லி பார்க்க வேண்டும் என்றார்.அவனை அங்கு அனைவருக்கும் தெரியும்.இந்தியாவுக்கே தெரியும்.அடுத்து எந்த பகடைக்காரன் தன்னை உருட்ட வந்திருக்கிறான், ஆராய்ச்சியாளன் பரிசோதனை கூடத்தில் எலியாக்கி பார்க்க போகிறான் என நினைத்தவாறு அவன் வந்தான்.கிழவர்.ஒரிரு வார்த்தைகளில் தென்னாட்டுக்காரர் என தெரிந்தது.அநேக பரதேசி.கிழவருக்கு அவன் அத்தனை சரியாக சவரம் செய்த முகத்தை கொண்டிருப்பது ஆச்சிரியம் அளித்தது.வெளிர் நிற உடை.பியூன் வேலை.விஷயம் கேட்டான்.அவர் சொன்னார்.ஊடகங்கள் சொன்னவை எல்லாம் உண்மையா, அன்றே எப்படி புகார் கொடுக்க முடிந்தது , கேட்க நினைத்து கேட்கவில்லை.பயம் அல்ல.கேட்டு என்னவாக போகிறது.கேட்டார்.மனிதர்கள் இருக்கீறார்களா.அவன் அவரை பார்த்தான்.பழுப்பேறிய கண்கள்.புரியவில்லை என்றான்.மனிதர்கள் இருக்கீறார்களா.அவன் தெரியவில்லை என்றான்.இந்தியா இருக்கிறதா.தெரியவில்லை.பின்.நான் இருக்கிறேன்.நான் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்.அது மட்டும் தெரிகிறது என்றான்.அவன் மேலே ஏதுவம் சொல்லவில்லை.ஆழ்மனம் திறந்து குழந்தை போல பேசிவிட்டோமே என எண்ணியவாறு நின்றான்.அவர் கிளம்பினார்.அவன் அவரை பார்த்தவாறு நின்றார்.

ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினான்.கிழவர் பார்த்தார்.தென் ஆற்காடு மாவட்டம்.பண்ருட்டி.அக்காள் திருமணமாகி கனவனை இழுந்தவள்.இவள் கடைசி.தந்தை முந்திரி மொத்த வியாபாரம்.திருமணம் செய்யலாமா.பெண் பி.எஸ்.சி முடித்து பி.எட் படித்திருந்தாள்.வயது மூப்பது.அக்காளுக்கு இப்படி ஆனதால் யாரும் கட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.கீழவர் ஒன்றும் சொல்லவில்லை.அக்காளுக்கு குழந்தை உண்டா என்று கேட்டார்.உண்டு.பெண்.பிரச்சனையில்லை.அப்படியென்றால் திருமணம் செய்யலாம் என்றார்.ஏப்படி என்றான்.கிழவர் சிரித்தார்.அவ்வளவுதான் என்று பொருள்.

சில மாதங்களில் நல்ல எடை போட்டு விட்டான் புகைப்படக்காரன்.ஒரு நாள் கிழவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.கிழவர் கேட்டார்.மனிதர்கள் இருக்கிறார்களா.அவன் முழித்தான்.கிழவர் தொடர்ந்து இந்தியா இருக்கிறதா என்று கேட்டார்.அவன் கிழவர் முகத்தை பார்த்தான்.தனி தமிழ்நாடு குறித்த உங்கள் கருத்து என்ன.தொடர்ந்து கேட்டார்.அவரது முகத்தில் சூட்சம்ம் தெரிந்த்து.பலமாக சிரித்தான்.அவரும் சிரித்தார்.