சிற்பி தனபால்


ஆனந்த விகடனில் தொண்ணூறுகளில் நாற்பது வாரங்களுக்கு வந்த கட்டுரைத் தொடர் , சென்ற வருடத்தில் ஒரு சிற்பியின் சரிதை என்று நூலாக்கம் பெற்றது.கிருஷ்ணபிரபு பதிப்பித்துள்ளார்.சிற்பி தனபாலின் சுயசரிதை.மயிலாப்பூரில் பள்ளியில் பயின்ற தனபால் தனக்குள்ள ஒவிய ஆர்வம் பற்றி சொல்ல அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவருக்கு சென்னை ஓவியக் கல்லூரி பற்றிய அறிமுகத்தை அளிக்கிறார்.பின்னர் அங்கு சேர்வதற்கு ஃபோட்டோ ஸ்டுடியோவில் சேர்கிறார்.அது சரியான வழியில்லை என்று அறியும் போது ஓவியரிடம் சென்று கற்கிறார்.ஓவியக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.அங்கே அப்போது  ராய் செளதுரி முதல்வராக இருக்கிறார்.அந்தக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வர் ராய் செளதுரி.அவர்  தான் மெரினாவில் இருக்கும் உழைப்பாளர் சிலையை உருவாக்கியவர்.அவர் அங்கு முதல்வரானதற்கு முக்கிய காரணம் சர் ராமசாமி முதலியார் என்கிறார் தனபால்.இப்போதும் சென்டரல் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் சர் ராமசாமி முதலியாரின் செளட்டிரியே பார்க்க முடியும்.

மயிலாப்பூரில் அந்தக்காலத்தில் லஸ் கார்னரில் ஒரு கடைத்தான் இருக்கும் என்கிறர்.டிராமிலிருந்து தன் தந்தை கம்பீரமாக இறங்கி வரும் சித்திரத்தை சொல்கிறார்.ஓவியக் கல்லூரியில் பயிலும் போது ராய் செளதுரி அவரை கவனித்து அவரை சிற்பத் துறைக்கு மாறிவிடச்  சொல்கிறார்.ஆனால் ஏற்கனவே இரண்டு வருடங்கள் ஓவியத் துறையில் பயின்று விட்டதால் அவர் ராய் செளதுரி சொல்வதை மறுத்து விடுகிறார்.ஆனால் பின்னர் அவர் சிற்பி தனபால் ஆகிறார்.ராய் செளதுரி சரியாகத்தான் கணித்திருக்கிறார்.

அவர் பாரதிதாசன், காமராஜர், காந்தி, பெரியார் , நேரு , ராதாகிருஷ்ணன் போன்ற ஆளுமைகளின் சிற்பங்களை உருவாக்கியதன் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.அவரிடம் ராமானுஜம், ஆதிமூலம் என்று பிற்காலத்தில் பெரிய அளவில் அறியப்பட்ட ஓவியர்கள் கற்றதை பற்றி குறிப்பிடுகிறார்.ஒரு முறை கல்லூரியில் படிக்கும் போது சென்னையிலிருந்து பெங்களூருக்கு சைக்களிலில் பயணம் செய்ததை பற்றி சொல்கிறார்.அதை குறித்து இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.ஆச்சரியமான பயணம்.அவருக்கு ஓவியம் , சிற்பம் தவிர்த்து நடனம் , நாடகம் போன்றவற்றிலும் ஆர்வம் இருந்திருக்கிறது.கதக் , கதகளி  கற்றிருக்கிறார்.நாடகங்களில் நடித்திருக்கிறார்.அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த போது அந்தப் பெண்னை ராய் செளதுரியை சந்திக்க வைக்கிறார்.அவர் படித்த அதே கல்லூரியில் பின்னர் முதல்வர் ஆகிறார்.கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பணிபுரிகிறார்.ஓவியர்கள்  , சிற்பிகள் பற்றி நம்மிடைய நிறைய புத்தகங்கள் இல்லை.இது போன்ற நிறைய நூல்கள் வருவது நன்றாக இருக்கும்.தனபால் உருவாக்கிய சிற்பங்கள், ஓவியங்கள், அவரின் புகைப்படங்கள் மிக அழகிய முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூலை மிக நல்ல முறையில் கிருஷ்ண பிரபு பதிப்பித்துள்ளார்.சிறுவானி வாசகர் மையத்துடன் இனைந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியீட்டுள்ளது.கிருஷ்ண பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.




No comments: