ட்டய்கு ரியோக்கன் கவிதைகள் - 8

 

1. At Crossroads and through streets I begged all day.

   My wandering steps have led me to a village shrine.

   Children come around me, whispering one to another

   The silly priest of last year has returned to play. 

 

   நாற்சந்திகளிலும் தெருக்களிலும் நாள் முழுவதும் பிச்சை எடுத்தேன்.

   என் இலக்கற்ற நடை என்னை கிராமத்தின் சிறு மடத்திற்கு கொண்டு வந்தது.

   என் அருகில் வரும் குழந்தைகள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொள்கிறார்கள்   

   சென்ற வருடத்தின் பேதைத் துறவி விளையாட திரும்ப வந்துவிட்டார். 


2. My walking skirt is short , but my holy gown is long.

    Enraptured , I work for hours my own flesh and bones.

    Children stop me in a street , and sing loudly to me

    A bouncing-ball ballad , beating their hands for joy.

 

    எனது நடை உடை சிறிது ஆனால் என் புனித அங்கி பெரிது

    நான் பல மணி நேரம் பணி புரிகிறேன் ஆனந்தத்துடன்,எனதேயான சதை எலும்புகள்.  

    குழந்தைகள் என்னை சாலையில் நிறுத்தி சத்தமாக பாடுகிறார்கள்.

    ஒரு டெமாரி பந்துப் பாடல்,மகிழ்ச்சிக்காக தங்கள் கைகளை தட்டிக்கொள்கிறார்கள்.

 

3. Once I sought to triumph at a grass-fighting game.

    I reveled in beating children, one after another.

    Till evening closed , and I was left alone to view.

    A perfect moon ascending the cloudless autumn sky.

 

     ஒரு முறை புல் சண்டை விளையாட்டில் நான் வெற்றி பெற முயன்றேன்

     ஒருவர் பின் ஒருவராக குழந்தைகளை வெல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்

     மாலை சாயும் வரை, பின்னர் நான் தனித்து விடப்பட்டேன்

     மேகங்கள் அற்ற இலையுதிர்காலத்தில் முழு நிலவு மேலெழுவதை காண்பதற்கு.

   

4. My hair over my ears and my ears big enough for note.

    My garments are torn to tatters like shredded clouds.

    Half-awake, half-asleep, I trudge along towards home.

    Children escort me , some ahead of me, some behind me.

 

     என் காதுகளுக்கு மேல் என் தலைமயிர் , ஒலிக்குறிப்புகளை உணரும் அளவு என் காதுகள் பெரியது.

     சிதறிய மேகங்கள் போல கிழிந்திருந்த என் உடைகள்

     அரைத் தூக்கம் , அரை விழிப்பு , நான் வீட்டை நோக்கி தவழ்ந்தேன்

     குழந்தைகள் என் வழித்துணைக்கு  வந்தனர், சிலர் என் முன்பு , சிலர் பின்பு.   

    

5.  Day after day , yet at the return of another long day,

     I take pleasure in playing with the village children.

     In my sleeves I always have hid a few bouncing balls.

     Incompetent otherwise , I luxuriate in spring delight.

 

     நாளை மற்றொரு நாளே, இருந்த போதும் மற்றொரு நீண்ட நாளின் முடிவில்

     குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

     என் சட்டையில் நான் எப்போதும் சில டெமாரி பந்துகளை ஒளித்து வைத்திருக்கிறேன்.

     வேறொன்ரும் அறியாதவன், வசந்தத்தின் மகிழ்ச்சியில் துய்க்கிறேன்.