மகிழ்ச்சி சூழட்டும்
வானத்தில் செந்நிறத் தீற்றல்.
தூய ஒளி வெண்ணிற அருவி போல
எங்கும் படர்ந்தது.
அடர்வனத்தை ஊடுருவிய ஒளிக்கற்றைகள்
மண்ணுக்கும் வெளிக்குமான
பாலத்தை உருவாக்கியது.
புங்கை மரத்தின் இளஞ் சிவப்பு
பூக்கள் எங்கும் சொரிந்தன.
வெயிலின் சத்தம் வண்டின் ரீங்காரம் போல
ஒலித்துக்கொண்டிருந்தது.
நிஷ்களங்கம் நிரம்பிய
அந்தக் குழந்தை
தாயின் கதகதப்பில்
அரவணைப்பில்
தூங்கிக்கொண்டிருந்தது.
அங்கே தாய் சேய் இருவரையும்
மஞ்சள் நிற
மகிழ்ச்சி
சூழ்ந்திருந்தது.