தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு


"தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு" என்ற ஐ.ஜோப் தாமஸ் எழுதியுள்ள புத்தகம் அற்புதமாக இருக்கிறது.பாறை ஓவியங்களிலிருந்து ஆரம்பித்து பின்னர் ஓவ்வொரு காலகட்டத்தையும் சரியாக பிரித்து அந்தக் காலங்களில் கோயில்களில் வரையப்பட்ட ஓவியங்கள் அந்தக் காலகட்டத்தி்ன் அரசியல் சூழல் என்று விரிவாக எழுதியுள்ளார். மராத்தியர் காலத்தில் ஓவியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்,கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் மதராஸில் துணிகள் மீது அச்சிடப்பட்ட ஓவியங்கள்,மதராஸில் ஹண்டரால் தொடங்கப்பட்ட கலைப்பள்ளி ,அங்கு அளிக்கப்பட்ட பயிற்சி,பின்னர் தேவி பிரசாத் ராய் செளத்திரி கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்த காலத்தில் ஓவியத்துறையில் உருவான புதிய கொள்கைகள் என தெளிவாக விளக்கியுள்ளார்.

இதை தமிழில் ஏஞ்சலினா பாமா பால் மொழியாக்கம் செய்து உள்ளார்.சிதம்பரம் , திருப்பருத்திக்குன்றம்,தஞ்சை என்ற பல கோயில்களின் ஓவியங்கள் அழகாக அச்சிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.ஓவ்வொரு ஓவியத்தின் பின்னுள்ள தொன்மத்தையும் விளக்குகிறார்.தமிழக வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் இந்த நூல் அளிக்கிறது.மிகச் சிறந்த புத்தகம்.

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு - ஐ.ஜோப் தாமஸ் - தமிழில் ஏஞ்சலினா பாமா பால் - காலச்சுவடு பதிப்பகம்.

No comments: