நேற்றிரவு படித்துறையில் அமரந்திருந்தேன்.
யாரோ அழைப்பது போல இருந்தது.
பால்ய கால நண்பன்.மகிழ்ச்சியோடும் உவகையோடும்
என் கரங்களை பற்றிக்கொண்டான்.
உன்னை நிறைய தேடினேன்.எவ்வளவு நாட்கள்.
எங்கியிருந்தாய் என்று வினவினான்.
கானகம் சென்றிருந்ததாக சொன்னேன்.
தன் வியாபாரம், திருமணம் , குழந்தைகள்,
தொடர்புகள் பற்றி சொன்னான்.
கேட்டுக்கொண்டிருந்தேன்.
படகு ஒன்று நதியில் சென்றுகொண்டிருந்தது.
இருவரும் சிறிது நேரம்
அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
திடீரென்று என் தோள்களை பற்றி என்னை
அரவணைத்துக்கொண்டான்.
கண்களில் நீருடன் நீ மட்டும் அன்று
என்னை கண்ணத்தில் ஓங்கி அறையாமல்
இருந்திருந்தால்
நம் உறவு முறிந்திருக்காது என்றான்.
நான் புன்னகைத்தேன்.
No comments:
Post a Comment