வேடிக்கை
ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய சமீபத்திய செய்தியொன்றில் அவர் இவ்வாறு கூறியதாக இருந்தது.'என் கணித அறிவை கொண்டு சிந்திக்கும் போது இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் பூமி என்ற ஒரேயொரு கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.நம்மை விடவும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய வேற்றுகிரக உயிர்கள் இருக்கக்கூடும்.அவைகளை நாம் தொடர்புகொள்ளாமல் இருப்பது தான் நமக்கு நல்லது' என்பது போல இருந்தது. அவர் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம்.பிரபஞ்சம் எல்லையற்றது. அதன் நியதிகள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை. கடவுள், கடவுள் என்று யாசித்தல், நமக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என்று புலம்பல், இவைகள் சற்று வெளியே நின்று பார்த்தால் வேடிக்கையாகவும் இருக்கக்கூடும்.வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவும் என்னிடம் இல்லை என்பதே சரியாக இருக்கமுடியும். நீர்வழிப் படூஉம் புணைபோல் என்று எழுதியவன் தீர்க்கதரிசி. பிரமிளின் கவிதை ஒன்றை வாசித்த போது இவைகள் எல்லாம் சந்தித்துகொண்டன.பிரமிளின் இந்தக் கவிதை இந்தப் பொருளில்தான் எழுதப்பட்டதா என்பதை யார் அறிவார்.
வழி
வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன
வானம் எல்லையில்லாதது.
-பிரமிள்
பகுப்புகள்:
சில குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இந்தக் கவிதை இந்தப் பொருளில்தான் எழுதப்பட்டதா //
இருக்கலாம் நண்பரே , கடந்த காலத்தில் நடந்த ஏதேனும் ஒரு துயர சம்பவத்தை அல்லது சறுக்கலை நினைக்கும் போதும் //வேடிக்கையாகவும்// தோன்றுகிறது. நீண்ட நாள் பின்பு பதிவிட்டாலும் நல்லதோர் பதிவு (சற்று இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமே - என்பது எனது (பணிவான) கருத்து-விருப்பம் )
Post a Comment