அவமானங்கள்
குனிந்து நில்.
கைகளை கட்டு.
மீசையை மழி.
நிர்வானம் கொள்.
கூலியை பெறு.
சோற்றைத் தின்.
பழகிக்கொள்.
குறிப்பு
தொடர்ந்த வாக்கியங்களாக அல்லாமல் ஒரு வரிக்கு கீழ் ஒரு வரி என்கிற ரீதியில் கவிதை ஏன் எழுத வேண்டும் என்கிற போது செர்கய் ஐஸன்ஸ்டைனின் Film Sense புத்தகம் படித்ததில் ஒரு எண்ணம் கிடைத்தது.இரு வரிகள் பிரிக்கப்பட்டு நமது வாசிப்பில் அது சேரும் போது கிடைப்பது அவை இரண்டிலும் இல்லாத புதியதொரு எண்ணம் தானே.
மேலே எழுதியுள்ளதை(கவிதை) காட்சிபடுத்துகையில் இவ்வாறு தோன்றியது.
1. குனிந்து நில் - மிடில் ஷாட் - கைகள், இடைவரையிலான உடைகள் அற்ற உறுதியான உடல்.அவன் மட்டும்.
2. கைகளை கட்டு - அதே காட்சி - கேமிரா நகரவில்லை - கைகளை கட்டுகிறான் - அதன் சத்தம்.
3. மீசையை மழி - மிக அண்மைக் காட்சி - குனிந்த மீசையற்ற முகம்.
4. நிர்வானம் கொள் - மிக தூரக் காட்சி - முழு நிர்வானமான அவன் உடல் பக்கவாட்டில் இருந்து.பின்னனியில் காலியான அறை.சில நாற்காலிகள்,மேஜை. அதில் யாரும் இல்லை.
5. கூலியை பெறு - மிக அண்மைக் காட்சி - அவன் கைகள் இரண்டும் - பெறும் நிலையில்- சில்லறை நாணயங்கள் வேறொரு கையிலிருந்து அவன் கையில் விழுகின்றன. நாணயங்கள் சற்று பழைய காலத்தை சேர்ந்தவை.
6. சோற்றைத் தின் - அண்மைக் காட்சி - வெள்ளைச் சோறு - பின்னனியில் வீட்டின் தூண் - சோற்றை வாயில் தினிக்கிறான் - இரண்டு முறை.
7. பழகிக்கொள் - மிடில் ஷாட் - படுத்து உறங்குவது போலவோ தூணில் சாய்ந்து அமர்ந்திருப்பது போல இருக்கும் காட்சி.
எளிதில் காட்சிபடுத்த முடியாது எழுதப்படும் கவிதை சிறந்த கவிதைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பகுப்புகள்:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
...பழகிக்கொள்//
அடிக்கடி நான் கேட்கும் , எனக்கு சொல்லப்படும் வார்த்தை. அதன் நேரடியான அர்த்தத்தில் உங்களின் கவிதையில் பயன்படுத்தியது மிக அருமை . எளிமையான வரிகளில் ஆழமான கருத்து .. Super...!
நன்றி.மேலே நான் எழுதியதை(கவிதை!) பற்றி தோன்றியதை குறிப்பில் சேர்த்திருக்கிறேன்.
Post a Comment